இவருக்கு நேரடியாகப் பட்டத்தை அல்லவா கொடுத்திருக்க வேண்டும் – அட மியூசிக் டைரக்டரே சொல்லட்டாரே.

0
12903
james
- Advertisement -

சூப்பர் சிங்கர் சீசன் 8 பட்டத்தை யார் வெல்லப் போகிறார் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘ செப்டெம்பர் 2019. மலேஷியாவில் இருக்கிற மிகப்பிரபலமான ‘மின்னல்’ க்லப்புக்குள் சில குடும்ப நண்பர்களுடன் நுழைகிறேன். எங்களுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு முன் மேசையில் அமரவைக்கப்படுகிறோம்.
சிங்கப்பூர், மலேஷியா நாடுகளில் உள்ள இத்தகைய கிளப்புகளுக்கு நான் மிகவும் விரும்பிச் செல்வேன் – அங்கே பாடுகிற நம்ம ஊர் பாடகர்களைக் கேட்க.

-விளம்பரம்-

ரொம்ப அழகாகப் பாடுவார்கள். இங்கே நம்மூர் க்லப்புகளில் வெறும் இங்லிஷ் பாட்டு, கொஞ்சம் ஹிந்திப் பாட்டு, என்றோ ஒரு நாள் யாரோ ஒருவர் கேட்பதற்காக ஒரே ஒரு தமிழ் பாட்டு போடுவார்கள். அதுவும் இங்கே எல்லாம் வெறும் DJ-தான். ஆனால் வெளிநாடுகளிலுள்ள க்லப்புகளில் 100 சதவிகிதம் Live Singing-தான். எல்லாம் இங்கே நம்ம ஊரிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் கூட்டிச் செல்லப்படுகிற பாடகர்கள். அற்புதமாகப் பாடுவார்கள்.

இதையும் பாருங்க : வருங்காலத்துல டீ விப்போமா, இல்ல ரிக்‌ஷா இழுப்போமானு பயமா இருக்கு – பசுபதியின் Vintage வீடியோ.

- Advertisement -

அப்படி நான் உள்ளே நுழைந்து என் இருக்கையில் அமரப்போகையில், CD ஓடிக்கொண்டிருக்கிறது என நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, சில அடி தூரத்தில் சிவப்பு சட்டையணிந்து மைக்கில் ஒரு அழகான இளைஞன் நிஜத்தில் பாடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி!
‘இவ்வளவு துல்லியமாக இவ்வளவு ஸ்ருதி சுத்தமாக இவ்வளவு கற்பனைகளுடன் இந்தப் பாட்டை (‘மறு வார்த்தை பேசாதே’) இப்படி ஒருவனால் பாடமுடியுமா?’ என்று நான் அசந்துபோகும் அளவுக்கு இசை உறுதியுடன் அவன் அனாயாசமாகப் பாடிக்கொண்டிருந்தான். இவ்வளவு திறமைசாலிக்கு இன்னமும் பெரிய அடையாளம் கிடைக்கவில்லையே என்ற எண்ணமும் வந்தது.

This image has an empty alt attribute; its file name is image-64.png

அந்தப் பாட்டைப் பாடியவுடன் அவனை அழைத்துப் பாராட்டினேன். அதற்கப்புறம் பல பாடல்கள் பாடினான். அவன் மட்டுமல்லாது உடன் இருந்த மற்ற எல்லாருமே மிக அழகாகப் பாடினார்கள். நான் வந்ததையறிந்து என் பாடல்கள் சிலவற்றையும் பாடினார்கள். அவன் என் மனதில் நிரந்தமாகத் தங்கிவிட்டான். விரைவில் அவனுக்கு ஏதாவது நல்ல பாடல் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

-விளம்பரம்-

அவன் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் என்றும், Wild Card வழியாக இறுதிப்போட்டியாளராக தேர்வாகியிருக்கிறான் என்றும் இன்றுதான் என் மனைவி சொன்னார். வியப்பாக இருந்தது. இவனுக்கு நேரடியாகப் பட்டத்தை அல்லவா கொடுத்திருக்க வேண்டும். அசாத்திய திறமைசாலியாயிற்றே இவன் என்று. அந்த ஶ்ரீதரைத்தான் அன்று நான் கேட்டேன். இன்று இறுதிப் போட்டியாளன் என்று கேள்விப்பட்டேன். இந்த வருட சூப்பர் சிங்கர் பட்டம் வெல்லப்போவது யார் என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது.

Advertisement