25% ஹாட் ஸ்டாரில் வாக்குகளை வாங்கி சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற போட்டியாளர் – இரண்டாம் இடம் மூன்றாம் இடம் யாருக்கு பாருங்க.

0
4786
super
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முத்து சிற்பி, பரத், ஆனந்த் அபிலாஷ், மான்ஸி, ஸ்ரீதர் சேனா ஆகிய 6 பேர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்டு சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்களின் மானஸி, ஆதித்யா, ஐயனார், ஸ்ரீதர் சேனா ஆகிய 4 பேர் டாப் 4 இடத்தில் வந்தனர். இதில் இருந்து யாரவது ஒருவர் இறுதி போட்டிக்கு முன்னேறுவர் என்று எதிர்பகப்பட்ட நிலையில் மக்களின் அதிக வாக்குகளை பெற்று ஸ்ரீதர் சேனா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

- Advertisement -

அதே போல நடுவர்களின் தேர்வாக மானசியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து யாராவது திறமையான பாடகர்கள் வெளியேறினால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அதேபோல இதுவரை நடந்து முடிந்த பல்வேறு சூப்பர் சிங்கர் சீசன்களின் டைட்டில்களை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து தான் வருகிறது.

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.ஸ்ரீதர் சேனா இறுதிச் சுற்றுவரை வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக தான் அமைந்திருந்தது. ஆனால், அவர் வைல்டு கார்டில் பாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனின் பிரம்மாண்ட இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் அனைவரும் எதிர் பார்த்தது போல ஸ்ரீதர் சேனா முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். ஹாட் ஸ்டாரின் 25% வாக்குகளை பெற்ற ஸ்ரீதர் சேனா, 33,31,695 வாக்குகளை வாங்கி இருக்கிறார். அவருக்கு 10 லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் இடத்தை பிடித்த பரத்க்கு 3 லட்ச ரூபாய் பரிசும், மூன்றாம் இடத்தை பிடித்த அபிலாஷ்க்கு 2 லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement