எதுக்கு இந்த போட்டி அதான் யார் வின்னர்னு முடிவு பண்ணிட்டீங்களே – ரசிகரின் ஆதங்கம், பென்னியின் பதில்.

0
3449
benny
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், எஸ்.பி.பி.சரண், பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். 

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனி வரும் சூப்பர் சிங்கர் சீசன்களில் தான் பங்கேற்கப்போவது இல்லை என்று இந்த நிகழ்ச்சியின் ஒரு நடுவரான பென்னி தயாள் கூறி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து பதிவிட்டு இருந்த அவர், இனிமேல் சூப்பர் சிங்கர் சம்பந்தமாக எதையும் நான் பதிவிட மாட்டேன் என்னை திட்டி தீர்த்து வரும் மெசேஜ்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதையும் பாருங்க : இரண்டு குழந்தை இருக்கும் நிலையில் தோழிலுடன் நீச்சல் உடையில் ஜெயம் ரவி பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.

- Advertisement -

நீங்கள் என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி நானும் சாதாரண மனிதன் தான் என்னால் முடியவில்லை நன்றி அடுத்த சீசனிலும் உங்களை சந்திக்க மாட்டேன் என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் ஓனம் கொண்டாட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் நெட்டிசன் ஒருவர் கடுமையாக கமன்ட் செய்து இருந்தார்.

அதில், எப்படி உங்கள் வாயால் பொய் சொல்லுகிறீர்கள் இந்த வார எலிமினேஷன் மிகவும் கடினமான முடிவு இல்லை யார் சரியாக பாடவில்லை என்பது நன்றாக தெரிந்தது ரசிகர்கள் பலரும் நீங்கள் மதிப்பெண் வழங்குவதை பற்றி விமர்சித்ததால் தற்போது அதையும் நிறுத்தி விட்டீர்கள். அரவிந்த், மற்றும் ஸ்ரீதர் சேனாவை வெளியேற்றியது மிகவும் தவறு.

-விளம்பரம்-

இது போட்டி கிடையாது நாங்கள் ஏற்கனவே வெற்றியாளர் யார் என்பதை தேர்வு செய்து விட்டோம் என்பதை சொல்லிவிடுங்கள். இந்த நிகழ்ச்சி திறமையான பாடகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் தான் என்று பதிவிட்டிருந்தார். ரசிகரின் இந்த பதிவால் கடுப்பான பென்னி தயாள் ஓணம் வாழ்த்து சொல்லும் பதிவில் கூட இப்படி செய்வீர்களா என்று தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்

Advertisement