‘இறுக்கி அணைச்சு உம்மா தரு’ – விஜய் டிவி நிகழ்ச்சியில் கேட்ட போட்டியாளர். வைரலாகும் வீடியோ.  

0
1529
meena
- Advertisement -

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சியில் நடிகை மீனா கலந்திருக்கும் ப்ரோமோ குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த சீனியர் நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி:

கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருந்தது. சமீபத்தில் தான் இந்த சீசன் முடிவடைந்தது. தற்போது சீசன் 9 ஜூனியர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பாடகி சித்ரா, இசையமைப்பாளர் தமன், பாடகி அந்தோணி ஆகியோர் இருக்கிறார்கள். இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் டூயட் சுற்று நடைபெற இருக்கிறது. அதற்கான புரோமோகள் எல்லாம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மீனா:

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகை மீனா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே இவர் சீனியர் சீசனில் கலந்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது ஜூனியர் சீசனிலும் மீனா கலந்து கொண்டு இருக்கிறார். அப்போது நிகழ்ச்சியில் சிறுமி ஒருவர், ரஜினி நடித்த முத்து படத்தில் மீனா நடித்த கெட்டப்பில் அந்த சிறுமி உடை அணைந்து வந்து, இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரும் என்ற டயலாக்கை கூறியிருக்கிறார். இதை கேட்டவுடன் மீனாவும் அந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான புரோமோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மீனா திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் மீனா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது வரை இவர் படங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisement