சன் டிவியின் வெற்றிகரமான சீரியலின் இரண்டாம் பாகத்திற்காக திருமணம் சீரியலில் இருந்து விலகிய பிரபலம்.

0
66043
thirumanam-serial
- Advertisement -

தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் வெள்ளித் திரைக்கு சென்று படங்களை பார்ப்பவர்களை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளார்கள். அதிலும் சமீப காலமாகவே கலர்ஸ் தமிழில் பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 2018 ஆம் ஆண்டு “திருமணம்” என்ற சீரியல் ஒளிபரப்பானது. இந்த சீரியல் முழுக்க முழுக்க உணர்ச்சிகரமான காதல் தொடர் ஆகும். இந்த தொடர் கன்னட மொழியில் புகழ் பெற்ற அக்னிசாட்சி என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். அதோடு திருமணம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

மேலும், கலர்ஸ் தமிழில் இந்த சீரியல் தான் சூப்பர் ஹிட் என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் இந்த சீரியலை ஹீரோயின் ஜனனிக்காகவும், ஹீரோ சந்தோஷுக்காவும் பார்ப்பவர்கள் கூட்டம் தான் அதிகம். அதிலும் இவர்களுடைய காதல் வேற லெவல். இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் சித்து அவர்கள் டப்ஸ்மாஷ் மூலம் தான் மக்கள் இடையே பிரபலமானவர். அதற்கு பிறகு தான் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு ஜோடியாக நந்தினி புகழ் ஸ்ரேயா நடித்து வருகின்றார். இவர்களுடைய ஜோடிப் பொருத்தத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்கள் நிஜத்திலும் ஜோடியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த தொடரில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.

இதையும் பாருங்க : முதன் முறையாக நீச்சல் உடையில் ஸ்வாதி. ரசிகர்களை ஷாக்காக்கிய வீடியோ.

பொதுவாகவே டிவி தொடர்கள் என்றாலே ஒருவருக்கு பதில் மற்றவரை மாற்றுவது வழக்கமான ஒன்று தான். திருமணம் சீரியலில் கதாநாயகிக்கு தங்கையாக நடிக்கும் ப்ரீத்தி ஷர்மா அவர்கள் தற்போது சீரியல் இருந்து விலகி உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. திருமணம் என்ற சீரியலில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ப்ரீத்தி ஷர்மா. ஆனால், இவர் சீரியலில் இருந்து விலகியது அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறி வருகிறார்கள். மேலும், ப்ரீத்தி ஷர்மா சன் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகை ராதிகாவின் “சித்தி 2” என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதனால் தான் திருமணம் சீரியலில் நடிக்க தேதிகள் ஒதுக்க முடியவில்லை என்றும், இந்த காரணத்திற்காக தான் திருமணம் சீரியலில் இருந்து விலகி உள்ளார் என்றும் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Image result for சித்தி 2

இந்த சீரியலை பொறுத்தவரை பார்த்தால் சந்தோஷ் வேறு ஒரு பெண்ணைக் காதலித்து, குடும்பத்தினரின் நிர்ப்பந்தத்திற்காக ஜனனியை திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்தை விரும்பாத சந்தோஷ் ஜனையிடம் விவாகரத்து செய்ய கையெழுத்து வாங்கி கொள்கிறார். விவகாரத்திற்கு பிறகு ஜனனி மற்றும் சந்தோஷ் இடையே அன்பும், காதல் ஏற்படுகிறது. பின் தன் காதலித்த பெண்ணை மனப்பாரா?? கல்யாணம் செய்து கொண்ட பெண்ணின் கரம் பிடிப்பாரா?? என்பது தான் கதை.

Advertisement