சூப்பர் சிங்கர் புகழ் ப்ரியா ஜெர்சனுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகாலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித் திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:
சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 'சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9' விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், மற்றும் உன்னிகிருஷ்ணன் பங்கேற்று இருந்தார்கள்.

சூப்பர் சிங்கர் சீனியர் 9:
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சர்வதேச பகுதிகளில் இருந்து பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். முதலில் இந்த நிகழ்ச்சிக்கு 20 திறமையான போட்டியாளர்களை தேர்வு செய்தார்கள். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து முடிவுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிரபலமான இசையமைப்பாளர்கள், நடுவர்கள் என பலரும் சிறப்பு விருந்தினராக வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரியா ஜெர்சன்:
இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியாளர்களாக அபிஜித், அருணா, பூஜா, ப்ரியா ஜெர்சன், பிரசன்னா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இதில் அருணா டைட்டிலை வெல்ல முதல் ரன்னர் அப் பட்டத்தை ப்ரியா ஜெர்சன் வென்றார். இவருக்கு பரிசாக 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
ப்ரியா ஜெர்சன் நிச்சயதார்த்தம்:
தற்போது ப்ரியா ஜெர்சன் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான விஷயம் குறித்த தகவல் தான் வந்துள்ளது. அதாவது கேரளாவை சேர்ந்த இவர் வெளிநாடுகளுக்குச் சென்று இசைப் பயிற்சி பெற்றுள்ளார். தற்போது தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்துள்ளார் ப்ரியா. இவர்களுடைய நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களை ப்ரியாவே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.






