சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்ஷனுக்கு திருமணம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணி வேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகாலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித் திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:
அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ‘சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9’ ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம் மற்றும் உன்னிகிருஷ்ணன் பங்கேற்று இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து முடியும் வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
பிரியா ஜெர்சின்:
அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக அபிஜித், அருணா, பூஜா, பிரியா ஜெர்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இதில் அருணா டைட்டிலை வெல்ல, முதல் ரன்னர் அப் பட்டத்தை பிரியா ஜெர்ஷன் வென்றார். இவருக்கு பரிசாக 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரியா ஜெர்ஷன் நிச்சயதார்த்தம்:
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியா ஜெர்ஷன், ஒரு சில படங்களில் மற்றும் ஆல்பம் பாடல்கள் பாடியிருக்கிறார். கேரளாவை சேர்ந்த இவர் வெளிநாட்டுக்குச் சென்று இசைப் பயிற்சி எல்லாம் பெற்றுள்ளார் . சமீபத்தில் தான் தனது நீண்ட நாள் காதலருடன் பிரியா ஜெர்ஷனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை கூட பிரியா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். தற்போது இவருக்கு தனது காதலன் சார்லி ஜாய் என்பருடன் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
பிரியா ஜெர்ஷன் திருமணம்:
இவர்களின் திருமணம் பெற்றவர்கள் சம்பத்துடன் கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த தம்பதியரின் ரிசப்ஷன் கொச்சியில் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் பல சூப்பர் சிங்கர் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தி உள்ளார்கள். தனது திருமண புகைப்படங்களை பிரியா ஜெர்ஷன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து ரசிகர்களும் இந்த தம்பதியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.