சூப்பர் சிங்கர் ஜெயந்திக்கு விஜய் டிவி கொடுத்த எதிர்பாராத அதிர்ச்சி – புகைப்படம் உள்ளே !

0
1177

விஜய் டீவியில் 5 சீஸின் களை கடந்து தற்போது 6 வது சீஸினை எட்டியுள்ளது நிகழ்ச்சி ஏர்டெல் சூப்பர் சிங்கர் என்னும் பாடல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள பல பாடகர்கள் தற்போது சினிமாவில் பாடி வருகின்றனர்.

jayanthi

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 6 இல் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்,பென்னி டயால்,அனுராதா ஸ்ரீராம் போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இதில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த போட்டியாளர் தான் பாடகி ஜெயந்தி.

இவர் இனிமையான குரலால் பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் விஜய் டிவி மூலம் பிரபல பாடகி ஜானகி அவர்களை சந்திக்க வாய்ப்பளித்திருக்கிறது.இதனை விஜய் டிவி மேடையில் கூறிய ஜெயந்தி முதலில் தனக்கு பாடுவதற்கு பயிற்சி அளிப்பதற்காக புறப்பட்டுவர சொன்னார்கள்.

janaki

ஆனால் முதன் முதலில் அதற்காக விமானத்தில் என்னை அழைத்து சென்றது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை அளித்தது அதன் பின்னர் ஒரு ரூமில் கதவை திறந்து பார்த்தால் படியாகி ஜானகி அமர்ந்திருப்பதை பார்த்து நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறியதுடன் அனைவரது கண்களிலும் கண்ணீர் தழும்பியது.