சூப்பர் சிங்கறில் கிராமத்து பொண்ணா வந்த பிரித்திகா இது – படு மாடர்னா ஆளே அடையாளம் தெரியாத அளவு எப்படி ஆகிட்டாங்க.

0
240
Prithika
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ஆண்டுகள் பல கடந்தாலும் கொஞ்சம் கூட மக்கள் மத்தியில் குறையாமல் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

இதனால் வருடம் வருடம் வித்தியாசமான விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் புகுத்தி வருகிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். மேலும், இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு இருந்து வருகிறது. இந்த இதுவரை 8 சீசன்கள் சூப்பர் சிங்கர் ஜூனியர் நடந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 5ல் கலந்து கொண்டவர்தான் பாடகி பிரித்திகா. இவர் கிராமத்தில் ஓரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இருந்தாலும் தன்னுடைய திறமையினால் ரசிகர்களை கவர்ந்து அந்த சீசனில் டைட்டில் வினராக 40 லட்சம் மதிப்புள்ள வீட்டை தட்டி சென்றார் பிரித்திகா அதோடு சிறந்த பாடகர் என பல நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.

இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிரித்திகா அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய சொந்த கிராமத்திற்கே சென்று விட்டார். இவர் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாரயணன் இசையில் ஒரு பாடலை மட்டுமே பாடியுள்ளார். இதற்கு பிறகு கிராமத்தில் செட்டிலாகிவிட்ட பிரித்திகா தற்போது 1.3 லட்சம் சப்கிரைபர்களை கொண்ட ஒரு யூடுயூப் சேனலில் பாடல்களை பாடி பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

இவர்க்கு சமீபத்தில் தான் காதணிவிழா நடந்தது மேலும் இவருக்கு தற்போது 18 வயதாகிறது. யூடுயூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரித்திகா அவ்வவ்போது தனது சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டுட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சூப்பர் சிங்கர் ஜூனியர் 5ல் கலந்து கொண்டு வெற்றியடைந்த குட்டி பிரித்திகாவா இது என்று ஆச்சிரியப்பட்டு வருகின்றனர்.

Advertisement