யுவன் சார் எனக்கு பாட வாய்ப்பு தரனே சொல்லி இருக்கார் – ஆனந்த கண்ணீரில் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரபலம்.

0
649
krishang
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ஆண்டுகள் பல கடந்தாலும் கொஞ்சம் கூட மக்கள் மத்தியில் குறையாமல் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

இதனால் வருடம் வருடம் வித்தியாசமான விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் புகுத்தி வருகிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். மேலும், இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

- Advertisement -

இதையும் பாருங்க : முனகல் Bmgஐ லைவ்வாக கேட்க ஆசைப்பட்ட Vj – மாயா கொடுத்த நச் பதில். செருப்படி பதில் என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8:

இந்த நிகழ்ச்சியில் பல குழந்தைகள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அபீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா என்று 5 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சி முடிவு பெற்றது.

-விளம்பரம்-

முதல் பரிசு பெற்ற கிரிஷாங்:

இந்த சீசனில் முதல் பரிசை கிரிஷாங் தட்டி சென்றார். அவருக்கு 60,000,00 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தை ரிஹானாவும், மூன்றாம் தொடர்ந்து நேஹாவும் பெற்று இருந்தார்கள். இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்றதைக் குறித்து கிரிஷாங் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு பாடத் தெரியும் என்பதை இரண்டு வருடத்திற்கு முன்புதான் தெரிந்தது. நான், அம்மா, அப்பா, தம்பி எல்லோரும் கும்பகோணத்துக்கு காரில் போய்க் கொண்டிருந்தோம்.

பாட தொடங்கிய தருணம்:

அப்போது காரில் ஒரு பாட்டு ப்ளே ஆனது. அந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடித்து இருந்ததால் அதே மாதிரி பாட முயற்சி பண்ணி பாடினேன். அப்படித்தான் எனக்குள் இருக்கிற திறமையை கண்டு பிடித்தேன். சூப்பர் சிங்கர் ஆடிசனுக்கு வரும்போது எனக்கு மூணு பாட்டு மட்டும் தான் தெரியும். பின் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாத்தையும் கற்றுக்கொண்டேன். ஆடியோ வடிவில் தொடர்ந்து பல பாடல்களை கேட்டு முறையாக ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பித்தேன். டைட்டில் வின் பண்ணது ரொம்ப சந்தோசமாக இருக்கு.

டைட்டில் வின்னர் குறித்து சொன்னது:

டைட்டில் வின்னர் ஆன நிமிஷம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அப்போது யுவன் சார் எனக்கு பரிசு கொடுத்து விட்டு படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுப்பதாக சொன்னவுடனே எனக்கு அழுகை வந்து விட்டது. அதுமட்டும் இல்லாமல் எஸ்பிபி சாரை நான் ஞாபகப்படுத்துகிறேன் என்று சரண் சார் அடிக்கடி சொல்வார். அதனால் என்னை குட்டி டாடின்னு தான் கூப்பிடுவார். அவர் அப்படி சொல்லும் போதெல்லாம் நாம் அதற்கு தகுதியான நபரா? என்று என்னை நானே கேட்பேன். இப்ப வரைக்கும் அந்த தகுதி இருக்கா என்று தெரியாது? ஆனால், நிச்சயம் அவர் மாதிரி ஆக தொடர்ந்து முயற்சி பண்ணுவேன் என்று பல விஷயங்களை பேசி இருக்கிறார்.

Advertisement