மழைக்கு பயப்படாத ஒரு வாழ்க்கை எனக்கு வேணும் – கலங்க வாய்க்கு சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர்

0
2734
Kenly-Sija
- Advertisement -

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் சீசன் 9 குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி:

தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதலில் இந்த நிகழ்ச்சிக்கு 20 திறமையான பாடல்களை தேர்வு செய்தார்கள். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசன் 9 ஜூன் மாதத்தில் முடிவடைய இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்ற பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி:

மேலும், சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 ஜூன் மாதத்திலேயே ஆரம்பமாக இருக்கிறது. தற்போது இதற்கான ப்ரோமோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜூனியர் சீசனில் கலந்து கொள்ளும் நபர்களில் ஒருவர் தான் கென்லிசிஜா. இவர் இராமேஸ்வரத்தில் வசிக்கிறார். இவர் மீனவக் குடும்பத்தை சேர்ந்தவர். இந்நிலையில் கென்லிசிஜா குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர், நான் கென்லிசிஜா. எனக்கு மழையினா பயம்.

கென்லிசிஜா குறித்த தகவல்:

எங்கள் வீடு முழுக்க மழை நீர் ஒழுகும். அப்பா எப்ப வருவார் என்று அம்மா கடலையே பார்த்துட்டு இருப்பாங்க. அப்போ அம்மாவுக்கு ஆறுதலாக என் மட்டும்தான் இருக்கிறது. என் ஆசை கனவு எல்லாமே மழைக்கு பயப்படாத ஒரு வாழ்க்கை வேண்டும். அதற்கு நான் எடுத்து வைக்கிற முதல் படி தான் இந்த சூப்பர் சிங்கர் மேடை என்று கூறியிருக்கிறார். இப்படி கென்லிசிஜா தன்னுடைய குடும்ப சூழ்நிலை குறித்து பேசி இருக்கும் ப்ரோமோ வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement