தன் பிறந்தநாளில் சூப்பர் சிங்கர் மானஸிக்கு கார்த்திக் தேவராஜ் கொடுத்த ஸ்பெஷல் பரிசு.

0
188
manasi
- Advertisement -

சூப்பர் சிங்கர் மானசிக்கு கார்த்திக் தேவராஜ் கொடுத்திருக்கும் பரிசு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ஆண்டுகள் பல கடந்தாலும் கொஞ்சம் கூட மக்கள் மத்தியில் விறுவிறுப்பு குறையாமல் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. இதனால் வருடம் வருடம் வித்தியாசமான விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் புகுத்தி வருகிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். மேலும், இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : ராஜா ராணியன் இந்த கவுரவத்தை பெற்ற புதிய சந்தியா – ஆல்யா மானஸாவை மறந்ததா சீரியல் குழு.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

இதில் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல குழந்தைகள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி இருந்தார்கள். சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சி முடிவு பெற்றது.

-விளம்பரம்-

இசை கலைஞர் கார்த்திக் தேவராஜ்:

இந்த சீசனில் முதல் பரிசை கிரிஷாங் தட்டி சென்றார். அவருக்கு 60,000,00 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தை ரிஹானாவும், மூன்றாம் தொடர்ந்து நேஹாவும் பெற்று இருந்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு ஹிட்டாவதற்கு காரணம் மணி இசைக்குழு தான். மணி இசைக் குழுவில் பியானோ வாசிக்கும் இசை கலைஞராக இருப்பவர் கார்த்திக் தேவராஜ். இவரை பலருக்கும் தெரியும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எந்தளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு இசைக்கலைஞர் கார்த்திக் தேவராஜும் பிரபலம். இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

கார்த்திக் தேவராஜ் பிறந்தநாள்:

மேலும், இவர் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். தான் எடுக்கும் புகைப்படம், வீடியோக்களை அவ்வபோது பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பலர் செய்கிறார்கள். இந்த நிலையில் கார்த்திக் தேவராஜ் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். இவருடைய பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் போட்டியாளர்களில் ஒருவர் மானசியும் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து இருந்தார். அதில் அவர், எனக்கு மிகவும் பிடித்த கார்த்திக் தேவராஜூக்கு என்னுடைய இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு நேர்மறை ஆற்றல் உண்டு.

கார்த்திக் தேவராஜ் கொடுத்த பரிசு:

அதை நான் தனிப்பட்ட முறையில் அறிந்து இருக்கிறேன். இதற்கு நான் கடவுளுக்கு மிக்க நன்றி சொல்கிறேன். இந்த ஆண்டு நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் என்றும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் கார்த்திக் தேவராஜ் அவர்கள் தனது பிறந்தநாளின் போது மான்சியை அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின் அவருக்கு பியானோ இசைக் கருவியை ஸ்பெஷல் பரிசாக கார்த்திக் அளித்திருக்கிறார். இது குறித்த வீடியோவை தான் மானசி தன்னுடைய இன்ஸ்டால் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement