பொண்ணுங்க தான் பொசுக்கு பொசுக்குனு வளந்துடறாங்க – சூப்பர் சிங்கரில் வந்த குட்டிஸ் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

0
619
Nithyashree
- Advertisement -

சூப்பர் சிங்கர் பிரபலங்களின் குழந்தை புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

-விளம்பரம்-

பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறர்கள்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

மேலும், சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல குழந்தைகள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி இருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நிறைவு பெற்று இருந்தது.

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி :

தற்போது புத்தம் புதிதாக சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் வேறு யாரும் இல்லை நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீ நிஷா. இவர்களின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி இருக்கிறது. நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீநிஷா இவர்கள் மூவருமே தற்போது வெள்ளி திரையில் பாடகிகளாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

நித்யஸ்ரீ:

இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு பிறகு தொடர்ந்து படங்களில் பாடிக்கொண்டு வருகிறார். தற்போது நித்யஸ்ரீக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் பாடகி மட்டுமில்லாமல் மாடலிங் துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நிறைய ஆல்பங்களில் பாடியிருக்கிறார்.

பிரியங்கா:

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் பிரியங்கா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையிலும், மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.யுடன் மேடை நிகழ்ச்சியிலும் பாடி இருக்கிறார்.

ஸ்ரீநிஷா:

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீநிஷா. இந்த நிகழ்ச்சிக்குப் பின் இவர் சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளுக்கு சென்று பாடி இருக்கிறார். இவர் சென்னையை சேர்ந்தவர். எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்து இருக்கிறார். பின் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த அம்மா கணக்கு என்ற படத்தின் மூலம் தான் இவர் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடியிருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் பாடி இருக்கிறார். தற்போது இவர்

Advertisement