ரஜினி சாரலே அத மட்டும் தான் பண்ண முடிஞ்சது – நயன்னின் வன்மத்தால் ரஜினி பட வாய்ப்பை இழந்த நடிகை.

0
163
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நயன்தாராவால் நான் இழந்தேன் என்று பிரபல நடிகை அளித்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். மேலும், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

ரஜினி நடிக்கும் படங்கள்:

இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இன்னொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, ரஜினிகாந்த் உடன் ஒரு படத்தில் ஆவது பணியாற்ற வேண்டும் என்று நடிகர்கள், இயக்குனர்கள் என பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

குசேலன் படம்:

அந்த வகையில் ரஜினிகாந்த் உடன் நடிக்க இருந்த வாய்ப்பை நயன்தாராவால் இழந்துவிட்டேன் என்று பிரபல நடிகை அளித்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் அதிர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, பி. வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் குசேலன். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா, பசுபதி, மீனா, பிரபு, சந்தானம், வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் நயன்தாரா கெஸ்ட் ரோலாக வந்திருப்பார்.

-விளம்பரம்-

ரஜினி பட வாய்ப்பு இழந்த காரணம்:

அதேபோல் இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை மம்தா மோகன் தாசும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தில் வேறு ஒரு ஹீரோயின் தேவையில்லை என்று நயன்தாரா படக்குழுவினரிடம் கூறியதால் அந்த படத்தில் இருந்து மம்தா மோகன் தாஸ் நீக்கி இருக்கிறார்கள். இதுகுறித்து பேசிய மம்தா ‘குசேலன் படத்தில் ஒரு பாடலில் நடிப்பதற்காக என்னை அழைத்தார்கள். அங்கு நான்கு ஐந்து நாட்கள் படப்பிடிப்புகள் நடந்தது. ஆனால், படம் வெளியான போது என்னுடைய காட்சிகள் எதுவுமே இல்லை.

வீடியோவில் 25 : 32 நிமிடத்தில் பார்க்கவும் :

நடிக்க மறுத்த நயன் :

ஆனால் சிறிது நாள் கழித்து நான் ஒன்றை கேள்விப்பட்டேன். அந்த படத்தில் நடித்த நடிகை இந்த படத்தில் வேறு ஒரு நடிகை நடித்தால் நான் இந்த படத்திற்கு வரமாட்டேன் என்று சொன்னதாக கூறினார்கள். அந்த படத்தில் நான் நடித்த பாடல் இடம் பெறவில்லை. அந்த படத்தால் என்னுடைய மூன்று நான்கு நாட்கள் வீணாகப் போனது அந்த படம் வந்தபோது என்னை இந்நாள் இருந்து காண்பிக்கப்படும் ஒரு காட்சி மட்டும் இடம்பெற்றிருக்கும்.

ரஜினியிடம் இருந்து வந்த கால் :

பின்னர் இரண்டு மூன்று வாரங்கள் கழித்து ரஜினி சாரிடம் இருந்து எனக்கு கால் வந்தது. படத்தில் நடிக்க வந்ததற்கு நன்றி என்று மட்டும் சொன்னார். அவரால் முடிந்தது அது மட்டுமே அது மட்டும் தான் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. நன்றாகத்தான் இருந்தது ஆனால் என்ன அங்கே தவறு நடந்தது என்பதை என்னிடம் அவர்கள் சொல்லவே இல்லை வேறு யாராவது காப்பாத்த அவர்கள் அப்படி செய்திருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

Advertisement