பிரபல தமிழ் நடிகருடன் காதலா ? சூப்பர் சிங்கர் பிரகதி அளித்த நீண்ட விளக்கம்.

0
1786
Pragathi

சூப்பர் சிங்கர் பிரபலம் பிரகத்திக்கு அசோக் செல்வனுக்கும் காதல் இருப்பதாக வந்த வதந்திக்கு பிரகதி விளக்கமளித்துளளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012ம் ஆண்டு ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பிரகதி. மேலும் இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசையும் பெற்றார். பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும், பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை ‘ படத்தில் ஒரு கதாபத்திரத்திலும் நடித்திருந்தார் பிரகதி. இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் அஷோக் செல்வனுடன் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் பிரகதியின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த பிரகதி ‘அவரை தான் கேக்கணும்’ என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும், என்னை பற்றிய செய்திகளை அனுப்பி என்னுடைய திருமணம் குறித்து பலர் கேட்கிறீர்கள். எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ள திட்டமில்லை. அப்படி செய்தால் நான் கண்டிப்பாக அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், நான் ஒன்றை நேரடியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் இப்போது எந்த ஒரு உறவிலும் இல்லை, திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. தற்போது எனக்கு 20 வயது ஆகிறது. என்னுடைய படிப்பு மற்றும் வேலையில் கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய திருமணம் குறித்து யோசிக்கும் இடத்தில் நானில்லை.

எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருக்கும் ஒருவருடன் என்னை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளார்கள். ஆரம்பத்தில் இதை நான் வேடிக்கையாக எடுத்துக் கொண்டேன். ஆனா,ல் இது மிகவும் தவறாக சென்று கொண்டிருப்பதை பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆதாரம் இல்லாமல் எந்த ஒரு போலியான விஷயத்தையும் யாரும் எழுத வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

பிரகதி மற்றும் அசோக் செல்வனுக்கு இடையிலான காதல் கிசு கிசு புதிதான ஒன்றில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அந்த தகவலை இருவருமே மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement