விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் பல வித்யாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது வசீகரமான குரலின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி பிரகதி.
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 2012 ஆம் கலந்து கொண்ட பிரகதி இரண்டாம் பரிசை பெற்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது.
இதையும் படியுங்க : திருமணத்திற்காக மதம் மாறிய மோனிகா.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!
பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். அதன் பின்னரே 2012 ஆம் விஜய் தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றார்.
அதன் பின்னர் தமிழில் அனிருத், ஜி வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுளளார் பிரகதி. இறுதியாக யுவன் இசையமைபில் கண்ணே கலைமானே என்ற படத்தில் ‘செவ்வந்தி பூவே’ என்ற பாடலை பாடி இருந்தார். அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரகதி குருபிரசாத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.