அவங்கதான் மறுபடியும் அத பத்தி பேச கூப்பிட்டாங்க – தங்கள் மீது குற்றம் சாட்டிய பாடகியின் திடீர் மரணம் குறித்து செந்தில் கணேஷ்.

0
5655
madura
- Advertisement -

நாட்டுப்புற பாடகியான மதுரமல்லி திடீரென்று இறந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுளது. கடந்த பிப்ரவரி மாதம் மதுரமல்லி, பிரபல பின்னணி பாடகர்களான செந்தில் கணேஷ் ராஜ லட்சுமி மீது குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த கோவில் திருவிழாவில் நடைபெற்ற மேடை கச்சேரி ஒன்றில் மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்ற பாடலை கலைவாணி என்பவர் தான் இயற்றிப் பாடிய ராஜலட்சுமி பேசியிருந்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாந்து. ஆனால் உண்மையில் அந்த பாடலை மதுரமல்லி என்ற புனைப்பெயரில் பாடல்களை இயற்றி பாடி வரும் டாக்டர் கலைச்செல்வி தான் பாடி இருந்தார்.

-விளம்பரம்-

இந்தப் பாடல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியின் கிராமிய பாடல்கள் மிஞ்சும் அளவிற்கு யூட்யூபில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்க்கப் பட்டு இருந்தது.அந்தப் பாடலை தான்தான் இயற்றி பாடியது என்பதற்கு ஆதாரமாக இன்றளவும் அந்த பாடல் யூட்யூபில் இருக்கும் நிலையில் யாரோ ஒரு பெண் அந்த பாடலை சொந்தம் கொண்டாடுவது கீழ்த்தரமாக இருக்கிறது என்று கண்டனம் தெரிவித்தார் அந்த பாடலுக்கு உண்மையான சொந்தக்காரியான மதுரை மல்லி என்கிற கலைச்செல்வி.

இதையும் பாருங்க : மாஸ்டர், புலி, துப்பாக்கி என்று ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ படத்தில் இடம்பெற்ற விஜய்யின் மேனரிஸம். (அதுவும் துப்பாக்கி சீன் செம)

- Advertisement -

மேலும், மேடையில் ராஜலட்சுமி கூறிய தவறான கருத்தை வாபஸ் பெறவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்ற அளவிற்கு பாடகி கலைச்செல்வி கடுமையான மன உளைச்சலுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால், இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட ராஜலட்சுமி,தன்னுடைய தங்கை எழுதி பாடிய பக்தி பாடலுக்கு கொடுத்த அறிமுகத்தை யாரோ ஒருவர் மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது பாடலை பாடுவதற்கு முன் பேசியது போல எடிட் செய்து உள்ளனர்.

நான் எந்த தவறையும் செய்யவில்லை, எங்கள் மீது வந்த புகாருக்கு எங்கள் பக்கத்தில் இருக்கும் பதில் தான் இது. யாருக்கும் பயந்தோ, மன்னிப்பு கேட்கவோ இந்த வீடியோ இல்லை என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நாட்டுப்புற பாடகி கலைச்செல்வி கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளார். தனது மனைவியின் இறப்பு குறித்து பேசியுள்ள ராஜேந்திரன் அவளுடைய பாடலை வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடி அதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை மிகவும் மன அழுத்தத்தில் இருந்தால் விட்டு விடலாம் என்று நான் எவ்வளவோ சொல்லியும் அவள் அதை கடந்து வர முடியவில்லை எல்லாம் சேர்த்து அவள் நெஞ்சுவலியால் போய் சேர்ந்து விட்டாள் என்று உருக்கமுடன் கூறியிருக்கிறார் ராஜேந்திரன்.

-விளம்பரம்-

கலைச்செல்வியின் மாறைவிற்கு, செந்தில் கணேஷ் தனது முகநூல் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் கலைச்செல்வியின் மறைவு குறித்து செந்தில் கணேஷ் கூறியுள்ளதாவது, குறிப்பிட்ட அந்தப் பாடல் சர்ச்சைக்கு நாங்க ஏற்கெனவே விளக்கம் தந்துவிட்டோம். மேற்கொண்டு நாங்கள் அதைப்பற்றி பேச விரும்பவில்லை. அவங்கதான் மறுபடியும் ராஜேஸ்வரி ப்ரியா மூலம் அதுபத்திப் பேசணும்னு கூப்பிட்டாங்க. முடிஞ்சு போன விஷயத்தை ஏன் மறுபடியும் வளர்க்கணும்னு நாங்க போகலை. இப்ப திடீர்னு அவங்க இறந்துட்டதா தகவல். நம்பவே முடியலை. அவங்க ஆன்மா சாந்தி அடையணும்னு வேண்டிக்கிடுறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement