செந்தில் கணேஷுக்கு அடித்த அதிஷ்டம்.!முன்னணி நடிகரின் படத்தில் வாய்ப்பு.! ஏ ஆர் ரகுமான் இல்லை.! இசையமைப்பாளர் யார் தெரியுமா.?

0
801
Senthil-Super-Singer

விஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இரு போட்டி கடந்த ஜூலை ஞாயிற்றுகிழமை (ஜூலை 15) நடைபெற்றது. இந்த போட்டியில் செந்தில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

senthil

அதுவும் யாருடைய இசையமைப்பில் தெரியுமா ?இசையமைப்பாளர் இமான் இசையில் தான் செந்தில் கணேஷ் விரைவில் பாட உள்ளாராம். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே மக்கள் மத்தியில் லைம் லைட்டாக இருந்து வந்தது செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி தான்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் சேர்ந்த இந்த தம்பதிகள் நாட்டுபுர பாடல்களை பாடி வரும் மேடை பாடகர்களான இருந்து வந்தனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களில் ஏகோபித்த ஆதரவை பெற்றார்கள். இசை புயல் ஏ ஆர் ரகுமான் கூட இவர்களது பாடல்களை கேட்டு மிகவும் மெய் சிலிர்த்து பாராட்டி இருந்தார்.

seemaraja

இந்நிலையில் நீண்ட முயற்சிக்கு பின்னர் சூப்பர் சிங்கர் பட்டத்தை பெற்ற செந்தில் கணேஷிற்கு, இமான் அவர்கள் தன இசையமைத்துள்ள “சீமராஜா” படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்துள்ளாராம். இந்த தகவலை இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கண்டிப்பாக அந்த பாடலும் ஒரு கானா பாடலாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.