ஜெயித்த வீட்டை வைத்து இதை தான் செய்வேன். சொன்னதை செய்தாரா மூக்குத்தி முருகன்.

0
119565
murugan
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக மூக்குத்தி முருகன் தேர்ந்து எடுக்கப்பட்டார். மேலும், இவர் டைட்டில் பட்டத்தை பெற்றால் என்னவெல்லாம் செய்வதாக மூக்குத்தி முருகன் கூறிய விஷயங்கள் எல்லாம் பார்க்கலாம். மேலும்,விஜய் டிவியில் பல ஆண்டுகளாகவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதிலும் இந்த வருடம் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாகவே மக்களிடையே நல்ல வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வந்தது.இந்நிலையில் இறுதிச்சுற்றுக்கு மூக்குத்தி முருகன், விக்ரம், சாம் விஷால், புண்ணியா,கவுதம் ஆகியோர் பைனலுக்கு தகுதி பெற்றவர்கள். அதோடு இறுதிச்சுற்று கிராண்ட் ஃபினாலே கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

-விளம்பரம்-
Image result for super singer 7 winner"

இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் அவர்களும், பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகென் ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தலா இரண்டு பாடல்களை பாட வேண்டும். அதன் படி ஆரம்பத்திலேயே மூக்குத்தி முருகன் அவர்கள் ‘எங்கே நிம்மதி’ பாடலையும், இரண்டாவதாக பில்லா படத்தில் ‘வெத்தலையை போட்டேண்டி’ என்ற பாடலையும் பாடி அரங்கையே அதிர வைத்தார். பின் வரிசையாக விக்ரம், சாம் விஷால், புண்ணியா,கவுதம் ஆகியோரும் பாடல்களை பாடினார்கள். மேலும், இந்நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கரின் டைட்டில் வின்னர் ஆக மூக்குத்தி முருகன் அறிவிக்கப்பட்டார்.

இதையும் பாருங்க : புதிய அலுவலகத்தை ஆரம்பித்த சில நாளிலேயே 50 வது படம் குறித்து அறிவித்த கமல்

- Advertisement -

இவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும் பரிசாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது இடத்தை விக்ரம் பிடித்தார். அவருக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக அறிவிக்கப்பட்டது. இவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் புண்ணியா, சாம் விஷால் இருந்தார்கள். இவர்களுக்கும் அனிருத் இசையில் பாட வாய்ப்பு தருவதாக அனிருத் அவர்கள் மேடையிலேயே அறிவித்திருந்தார். இப்படி சந்தோசமாக முடிவடைந்தது சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சி. இந்நிலையில் மூக்குத்தி முருகன் இன் சொந்த ஊர் தருமபுரி. இதில் மூக்குத்தி முருகன் அவர்கள் இறுதி சுற்று நடப்பதற்கு முன்பே அதிகப் பேட்டிகள் கொடுத்து இருந்தார். அதில் ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, நான் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட பிறகு வெளிநாடுகளில் பலரிடமிருந்து பணம் வந்தது. அதை நான் சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்தாமல் எங்க ஊரில் இருந்த அனாதை ஆசிரமத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தேன்.

Image result for super singer 7 winner"

இதனைத்தொடர்ந்து நல்ல நிலைமைக்கு வந்தவுடன் என்னுடைய ஊருக்கு பிணத்தை வைக்கும் ஐஸ் பெட்டி (Dead Body Freezer) ஒன்று வாங்கி கொடுக்க ஆசை. மேலும்,அது அவசியமான ஒன்று ஆகும். இந்நிலையில் சூப்பர் சிங்கர் டைட்டில் வென்ற உடன் அந்த வீட்டில் உள்ள ரூம்களை எல்லாம் மற்ற போட்டியாளர்களுக்கு கொடுப்பேன் என்று கூறி இருந்தார். மேலும், அனாதை இல்லத்தை துவக்க இருப்பதாக கூறியிருந்தார். அதற்கு மற்ற போட்டியாளர்கள் இடம் உதவி கேட்பதாக உள்ளேன் எனவும் பேட்டி அளித்திருந்தார். இப்படி இவர் கூறியிருந்த வாக்குகளை எல்லாம் செய்தாரா? இல்லையா? என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement