காதுக்கு கீழ் இருக்கும் நரம்பில் – அஜித்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சுரேஷ் சந்திரா விளக்கம்.

0
152
- Advertisement -

சமீபத்தில் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து அஜித்தின் மேலாளரும் செய்தி தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித் குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் அஜித்குமார் திடீரென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த தகவலை கேட்டதும் அவருடைய ரசிகர்கள் பலருமே பதறி போய் விட்டார்கள். பின் விசாரித்த போது தான் அஜித் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட வயதிற்கு மேலானவர்கள் முழு உடல் பரிசோதனை மற்றும் வழக்கமான பரிசோதனை செய்வது வழக்கம் தான். உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

முழு உடல் பரிசோதனை என்பது ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, கண் பரிசோதனை, சரும பரிசோதனை, பாலியல் தொடர்பான சோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் இருக்கிறது. அதோடு குடும்பத்தில் ஏதேனும் மரபியல் நோய் குறித்து விசாரிக்கப்படுவார்கள். இதனால் தற்போது நடிகர் அஜித்குமாருக்கு 52 வயதாகிறது. 50 வயதுக்கு மேல் ஆனாலே முழு உடல் பரிசோதனை செய்வார்கள்.

இதனால் தான் அஜித்தும் பரிசோதனை செய்து கொள்ள மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். இதை தெரிந்தவுடன் ரசிகர்கள் நிம்மதி ஆகினர். அனால், அஜித்துக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் அதனை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்துவிட்டதாகவும் டிவி சேனல்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. வழக்கமான பரிசோதனைக்கு சென்ற அஜித்திற்கு மூளையில் கட்டி இருப்பதாக மறுத்தவர்கள் கண்டிருந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

கேரளா, மதுரை ஆகிய இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களால் நடிகர் அஜித் குமாருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக டிவி சேனல்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது.  மூளையில் சிறிய கட்டி இருந்ததாகவும், அதனை நான்கு மணிநேர அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அதனை வெற்றிகரமாக அகற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மூளைப்பகுதியில் ‘ஸ்டன்ட்’ அதாவது ‘ஸ்கிரீன்’ வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியது.

இப்படி ஒரு நிலையில் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ததாக வெளியான செய்தி உண்மை இல்லை என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறி இருக்கிறார். அஜித் வழக்கம் போல மருவத்துவ பரிசோதைக்கு சென்ற போது ஏதேதோ ஸ்கேன் உள்ளிட்ட  சகல டெஸ்டுகளும் எடுக்கப்பட்டது. அப்போது காதுக்கு கீழே உள்பகுதியில் சின்ன வீக்கம் உள்ளதைக் கண்டறியப்பட்டது.

இதனால் பாதிப்பு ஏதுமில்லை. அதே சமயம் அரை மணி நேரத்தில் இதை சரி செய்து விடலாம் என்று மருத்துவர்கள் சொன்னதை அடுத்து உடனடியாக சரி செய்ய சொல்லி விட்டார். இதை அடுத்து  நேற்றே அந்த வீக்கம் அரை மணி அவகாசத்தில் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு நேற்றிரவே அவர் சிகிச்சை பிரிவில் இருந்து ஜெனரல் வார்டுக்கு வந்துவிட்டார்.மேலும், அவர் மருத்துவமனையில் இருந்து இன்றே டிஸ்சார் ஆகி விடுவார் என்றும் கூறியுள்ளார்.

Advertisement