‘நானும் பிராமணன் தான்’ லைவில் ஜாதியை அடையாளப்படுத்தியதால் சர்ச்சையில் சிக்கிய ரெய்னா.

0
3888
raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான சரேஷ் ரெய்னா, தனது ஆக்ரோஷமான பேட்டிங் திறமையால் மட்டுமல்லாமல் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராகவும் செயல்பட்டு பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற மிக முக்கிய காரணமா இருந்துள்ளார். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவர் செயல்பட்ட போதிலும், இந்திய அணியின் கேப்டனாக இருந்த மஹேந்திர சிங் தோணிக்கு நல்ல நண்பராக ரெய்னா இருப்பதால்தான் அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்ற விமர்ச்சனங்களும் அப்போது எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தோனி கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்த சில மணி நேரத்தில் ரைனாவும் தனது ஓய்வை அறிவித்து இருந்தார். இருப்பினும் உள்ளுர் போட்டிகளில் விளையாடி வரும் ரைனா ஐபில் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். தோனிக்கு அடுத்து சின்ன தல என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார் ரைனா.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர், நேரலையின்போது “நானும் பிராமணன் தான்” என்று ஜாதியை கூறி தன்னை அடையாளப்படுத்தி பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சமீபத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது.

இந்த போட்டிக்கு முன் சுரேஷ் ரெய்னா, வர்ணனையாளருடன் லைவில் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது சுரேஷ் ரெய்னாவிடம், தென்னிந்திய கலாசாரத்தை எப்படி தழுவுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரெய்னா, நான் நினைக்கிறேன். நானும் பிராமணன்தான். சென்னையில் 2004இல் இருந்து ஆடுகிறேன். இந்த கலாசாரத்தை நேசிக்கிறேன். எனது சக அணி வீரர்களை நேசிக்கிறேன என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ரைனாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் வர்ணனையில் போது தினேஷ் கார்த்திக், பேட்டை பக்கத்துக்கு வீட்டு மனைவியுடன் ஒப்பிட்டு பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் தான் செய்தது தவறு தான் என்று தினேஷ் கார்த்திக் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement