ஜோதிகாவுடன் அது ஒரு கனவாகவே இருக்கிறது- தனது மனதில் இருக்கும் ஆசையை சொன்ன சூர்யா

0
168
- Advertisement -

ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து நடிகர் சூர்யா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

இதற்கிடையே சூர்யாவும் நடிகர் ஜோதிகாவும் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் நடித்திருந்தார்கள். அப்போதே அவர்களுடைய காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது. முதலில் சூர்யாவின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு இருந்தது. பின், மனம் மாறிய சிவக்குமார் இவர்களின் திருமணத்துக்கும் பச்சை கொடி காட்டினார். கடந்த, 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சூர்யா-ஜோதிகா தற்போது வரை சிறந்த ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

சூர்யா ஜோதிகா திருமணம்:

சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் தங்களது குழந்தைகளின் பெயரில்தான் 2D என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் சூர்யாவும், ஜோதிகாவும் தமிழ்நாட்டை விட்டு மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார்கள்.

வீட்டில் பிரச்சனையா?

அதாவது தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காகவும், பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துவதற்காகவும் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சிவகுமார் வீட்டுடன் ஜோதிகாவுக்கு பிரச்சனை ஏற்பட்டது தான் அவர்கள் மொபைல் செட்டில் ஆக காரணம் என்று வதந்திகள் உலாவியது. ஆனால், அதற்கெல்லாம் முட்டுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் கூட ‘அமரன்’ படத்தை சிவக்குமாருடன் சேர்ந்து சூர்யா மற்றும் ஜோதிகா பார்த்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கங்குவா படம்:

தற்போது நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்திருக்கிறார். யுவி க்ரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன்களில் பிஸியாக இருக்கும் சூர்யா, ஒரு மேடையில் ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து பேசி இருக்கிறார். அதில், ஜோதிகாவுடன் நான் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருக்கிறது. அப்படி நடக்க நான் விரும்புகிறேன்.

தானாக நடக்க வேண்டும்:

மேலும், அது விரைவில் நடக்கும் என்றும் நம்புகிறேன். எங்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நாங்கள் எந்த இயக்குனரையும் கேட்க விரும்பவில்லை. அதற்கு பதிலாக, அது தானாக நடக்க வேண்டும். ஏதாவது ஒரு இயக்குனர் நாங்கள் இணைந்து நடிக்கும்படியான பொருத்தமான கதையை எங்களிடம் வந்து சொல்ல வேண்டும். அதை இந்தப் பிரபஞ்சம் நடத்தி வைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். சூர்யா இப்படி கூறி இருப்பது, அவர்களின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement