பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரை போற்று' திரைப்படமும் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.
https://twitter.com/BJP4India/status/1315573867591524352
இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.இந்த படம் முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படம் ஆகும். தமிழில் இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான செயலாகும். இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம்.
இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம்.கொரோனா பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் திரைப்படம் அமேசான் Ott தலத்தில் வெளியாகி இருந்தது. இருப்பினும் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர் பார்புகளை பெரிதும் பூர்த்தி செய்து இருக்கிறது. அதே போல இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பும் பெரிதும் பாரட்டப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இயக்குனர் சுதா , ஜாதியவாதியாக சில காட்சிகளை வைத்துள்ளதாக செய்தி தொகுப்பாளரும் பி ஜே பி கட்சியை சேர்ந்தவருமான மதன் ரவிச்சந்திரன் ட்வீட் செய்துள்ளார்.
https://twitter.com/MadanRavichand4/status/1326795680355131392
அதில், மூகநீதி போற்றிய சூரரை போற்று... படம் முழுவதும் சூர்யா இவரை நாயுடு நாயுடு என்று தான் அழைப்பார் ஆனால் படத்தில் சூர்யா பெரியரியவாதி அங்க தான் ட்விஸ்ட்டே ஜாதிவெறி மனதில் ஆழமாக உள்ளவர்கள் பெரியாரியவாதிகள் என்பதை படத்தின் இயக்குனர் சுதா (கொங்காரா) நன்கு புரிந்து வைத்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார். இந்த படத்திவை பார்த்த பலரும் கண்ட மேனிக்கு கமன்ட் செய்து வருகின்றனர்.





