ஜெயிச்சிட்ட மாறா – ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ள சூரரை போற்று. எந்தெந்த பிரிவில் தெரியுமா ?

0
2724

சூர்யா நடிப்பில் இறுதி சுற்று சுதா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று ‘ திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படமும் சாதனை படைத்த இந்தியர் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.

இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.இந்த படம் முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படம் ஆகும். தமிழில் இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான செயலாகும். இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம்.இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம்.

இதையும் பாருங்க : பிக் பாஸுக்கு பின்னரும் திருத்தலயா – சனமிடம் சொன்னதை சொல்லவே இல்லை என்று வாதாடும் பாலாஜி – ஜோ வெளியிட்ட முழு ஆடியோ.

- Advertisement -

அதே போல இந்த படத்தின் பல காட்சிகள் ஒரு முறை பார்த்தாலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடும். இப்படி ஒரு நிலையில் சூரரை போற்று திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமமாக ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து சூரரை போற்று திரைப்படமும் பொதுப்பிரிவில் பங்கேற்க இருக்கிறது.

சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் சூரரை போற்று போட்டியிட இருக்கிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி இறுதிப்போட்டியில் இடம்பெற வேண்டும். அதிலிருந்து தேர்வாகி பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள். எந்த பிரிவில் இந்த படம் ஆஸ்கார் விருதுகளை பெரும் என்று  ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் இந்த படத்தை பார்த்த பின்னரே முடிவாகும்.

-விளம்பரம்-
Advertisement