பிச்சையெடுக்கிறதை விடவும் மோசமான நிலைமை – சர்வைவரில் இருந்து வெளியேறிய காயத்ரியின் உருக்கம்.

0
25299
gayathri
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியும் சர்வைவர் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று வருகிறது. சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சர்வைவர் ரியாலிட்டி ஷோ வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் 16 போட்டியாளர்கள் தங்கியிருந்து அங்கு கொடுக்கப்படும் சவால்களை கடந்து வருவது சர்வைவர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் முதல் முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு சவால்கள் தொடங்கின. பின் போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வருகின்றனர்.

-விளம்பரம்-

நாட்கள் செல்ல இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் நாக்கு தள்ள வைக்கிறது. சொல்லப்போனால் பெசன்ட் ரவி டாஸ்கில் தன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் நிலையில் தான் வெளியேறினார். அதே போல கடந்த சில நாட்களாக இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது நிகழ்ச்சியில் இருந்து காயத்ரி வெளியேறி உள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி அவர்கள் ஏர்போர்டிலிருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் இந்தியாவிற்கு திரும்பி வருகிறேன். நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியேறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

- Advertisement -

நான் என்னுடைய hut-டை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். எப்போதும் என் மேல் ஒரு பத்து எறும்பு ஓடிக் கொண்டிருக்கிறோம். அங்கிருந்த நினைவுகளை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அங்கிருக்கும் போது எப்போது கிளம்புவோம் என்று நினைத்தேன். ஆனால், இப்போது யோசித்துப் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மிக சிறந்த அனுபவம் எனக்கு கிடைத்தது. நான் என்னுடைய தீவை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். எல்லாருமே வின் பண்ண முடியாது. எல்லாரும் வெளியே வந்து தான் ஆகணும். ஒருத்தர் மட்டும்தான் ஜெயிக்கணும்.

நான் மூன்றாம் உலகத்திலிருந்து இதுவரைக்கும் வந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப் படுகிறேன். எனக்கு ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில் நான் மனரீதியாக போராடினேன். இருந்தும் நான் போராடி இவ்வளவு தூரம் வந்தேன். இந்த நிகழ்ச்சி எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது. நான் எல்லாரையும் மிஸ் பண்ணுகிறேன். எல்லாரையும் கூடிய விரைவில் வந்து சந்திக்கிறேன். எல்லோரும் சப்போர்ட் பண்ணதற்கு நன்றி என்று கூறி இருந்தார். இப்படி இவர் பதிவிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

மேலும், பேட்டி ஒன்றில் பங்கேற்ற காயத்ரி, மூன்றாம் உலகத்தில் அதிக நாட்கள் இருந்த போட்டியாளர் என்று முறையில் கூறிய அவர் மூன்றாம் உலகம் என்பது ஒரு நரகம். அங்கே எனக்கு நல்லதும் நடந்திருக்கு. படுமோசமான விஷயங்களும் நடந்திருக்கு. பிச்சையெடுக்கிறதை விடவும் மோசமான நிலைமையை நான் அங்கே அனுபவிச்சிருக்கேன். இருப்பினும் மூன்றாம் உலகம் எனக்கு வாழ்க்கையில மிகப்பெரிய பாடத்தைக் கத்துக்கொடுத்திருக்கு என்று கூறியுள்ளார்

Advertisement