திடீர் திருமணத்தை முடித்த சர்வைவர் நிகழ்ச்சி பிரபலம் – மாப்பிள்ளை யார் தெரியுமா ? புகைப்படம் இதோ.

0
427
gayathri
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்திருக்கிறது. அந்தவகையில் விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்த படம் பிகில். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்து இருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து பிரபலமானவர் ரேபா மோனிகா ஜான். மேலும், இந்த படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா. இவர் நீண்ட நாட்களாக ரேபா மோனிகா- ஜியோமான் இருவரும் காதலித்து வந்தார்கள். இவருடைய திருமணம் கடந்த ஜனவரி 9ம் தேதி அன்று கேரளாவில் நடந்தது.இப்படி ஒரு நிலையில் இவரை தொடர்ந்து தற்போது மற்றொரு பிகில் பட நடிகைகும் திருமணம் நடக்க இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘அத எவன் பாத்து என்ன கிழிக்க போறோம்’ – ரஜினி ஷங்கர் பட காட்சியை சுசுகாக விமர்சித்த செல்வராகவன்.

திடீர் திருமணத்தை முடித்த ரேபா :

அது வேறு யாரும் இல்லை இதே படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி தான். மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் அதேபோல கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதல் 10 இடத்தில் இடம் பிடித்தவர்.காயத்ரி ரெட்டி தனது 18 வயதில் மாடல் துறையில் அறிமுகமான நடிகை காயத்ரி ரெட்டி நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது முதல் படமே தளபதி விஜயின் படம் என்பதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

சர்வைவில் காயத்ரி :

பிகில் படத்தை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்து இருந்தார். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார் காயத்ரி. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி இருந்தார்.முதலில் இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பல சவால்கள் கொடுக்கப்பட்டது. மேலும், பல போட்டிகள், சவால்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது.

டஃப்பான போட்டியாளராக வலம் வந்த காயத்ரி :

இந்த நிகழ்ச்சியின் பைனலில் விஜயலக்ஷ்மி, வனேசா மற்றும் சரன் ஆகிய மொத்தம் 3 போட்டியாளர்கள் களம் இறங்கி இருந்தார்கள்.மற்ற போட்டியாளர்களை எல்லாம் ஜூரியாகத்தான் வந்தனர். யாருக்கு டைட்டில் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். அதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இறுதியில் இந்த சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை விஜயலட்சுமி தட்டிச் சென்றார்.

காயத்ரி ரெட்டி திருமணம் :

இந்த நிகழ்ச்சியில் பைனல் வரை வரவில்லை என்றாலும் மிகவும்  டஃப்பான போட்டியாளராக வலம் வந்தார் காயத்ரி. கடந்த ஏப்ரல் 29-ந் தேதி நிச்சயதார்தம் நடைபெற்று இருந்ததாக திடீர் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார் காயத்ரி. இப்படி ஒரு நிலையில் இவருக்கு சமீபத்தில் திடீர் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காயத்ரி.

Advertisement