‘அத எவன் பாத்து என்ன கிழிக்க போறோம்’ – ரஜினி ஷங்கர் பட காட்சியை சுசுகாக விமர்சித்த செல்வராகவன்.

0
210
- Advertisement -

ரஜினியின் பட காட்சியை கிண்டல் செய்த செல்வராகவனை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், என்ஜிகே போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும், இவர் இயக்குவதும் மட்டும் இல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் பீஸ்ட். இந்த படத்தில் செல்வராகவன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து செல்வராகவன் நடித்த சாணி காகிதம் படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

செல்வராகவன் திரைப்பயணம்:

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது செல்வராகவன் படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார். தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருகிறேன் என்ற படம் உருவாகி இருக்கிறது . கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதோடு செல்வராகவன் இந்த படத்தை இயக்குவது மட்டும் இல்லாமல் நடித்தும் வருகிறார்.

செல்வராகவன் நடிக்கும் படம்:

இன்னும் சில தினங்களில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் அவர்கள் பகாசுரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. கூடிய விரைவில் இந்த படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி படத்தை கிண்டல் செய்து செல்வராகவன் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

-விளம்பரம்-

செல்வராகவன் அளித்த பேட்டி:

அதாவது, செல்வராகவன் அவர்கள் பேட்டி ஒன்றில் ரஜினி நடித்த சிவாஜி படம் குறித்து கூறியிருந்தது, சாலை ஓரத்தில் ஒரு வேலை சாப்பாடுக்கு எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், ஒரு பாடலின் போது துப்பாக்கியில் குண்டு வெளிவரும் அந்த ஒரு காட்சிக்கு 100 கணக்கான கேமராக்கள். ஒரு கோடி ரூபாய் செலவில் அந்த ஒரு காட்சி எடுக்கிறார்கள். இதனால் என்ன பலன்? இது ஏற்கனவே ஹாலிவுட் படத்தில் காண்பித்து விட்டார்கள்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இது செஞ்சி என்ன சாதித்தார்கள்? என்று தெரியவில்லை. இதே அந்த பணத்தில் ஒரு மனிதனுடைய எதிர்காலமே நன்றாக அமைந்திருக்கும். இது ஆரம்பத்தில் எனக்கு விசித்திரமாக இருந்தது. பின் அதிசயமாக இருந்தது. பின் சீ போங்கடா! என்று ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை விமர்சித்து நீ எதுக்குடா பல கோடி ரூபாயில் படம் எடுக்கிறாய்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement