வெளியான ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் – ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி. ஏன் இப்படி ?

0
3194
vadi
- Advertisement -

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜூலை 16) வெளியாகியுள்ளது. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது சூர்யா வெற்றிமாறன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் கமிட் ஆகி இருக்கிறார். ‘அசுரன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது சூரியை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். முதலில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அசுரன் படத்தை தயாரித்த வி.கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தான் இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Image

இந்த படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும், இந்த படத்தில் நடிகர் சூர்யா,  தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்கிறார் என்ற தகவலும் கூட வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட்டுக்காக முதற்கட்ட போட்டோ ஷூட்டை அண்மையில் நிறைவு செய்தார் சூர்யா.

இதையும் பாருங்க : ஆர்யா இல்லை, இந்த நடிகரை மனதில் வைத்து தான் இந்த படத்தை எழுதினேன் – ரஞ்சித் சொன்ன சீக்ரெட். (செமயா இருந்திருக்குமே)

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மாலை 5.30 க்கு இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டரை கபிலன் என்பவர் தான் வடிவமைத்து இருக்கிறார். இவர் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான தனுஷின் கர்ணன் பட போஸ்டர்களையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் போஸ்டருக்காக ஆவலுடன் காத்துகொண்டு இருந்த ரசிககர்ளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது. இருப்பினும் டைட்டில் லுக் என்பதால் தான் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். தற்போது சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன், அந்தப் படத்தை முடித்து விட்டு வாடி வாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement