விக்ரம் படத்தை தொடர்ந்து தமிழ் நடிகரின் படத்தில் சம்பளமில்லாமல் நடித்துள்ள சூர்யா – கமல் சிபாரிசா இருக்குமோ ?

0
551
surya
- Advertisement -

சூர்யா, ஷாருகான் குறித்து மாதவன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமில்லாமல் பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-
vikram

இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

மாதவனின் திரைப்பயணம்:

அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார். அதோடு மாதவன் படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறார். தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’.

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்:

இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த வாழ்க்கையை டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடித்து இருக்கிறார். அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கௌரவ வேடத்தில் இந்திப் பதிப்பில் ஷாருக்கானும், தமிழ் பதிப்பில் சூர்யாவும் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மாதவன் அளித்த பேட்டி:

தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக மாதவன் பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர், இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க சூர்யா, ஷாருக்கான் இடம் கேட்டபோது அவர்கள் உடனே சம்பாதித்தார்கள். அதற்கு காரணம் எங்கள் உடைய நட்பு தான். சொன்ன நாளில் சரியாக வந்து சாருக்கான், சூர்யா இருவருமே நடித்துக் கொடுத்தார்கள். மேலும், ஷாருக்கானும், சூர்யாவும் இந்த படத்தில் நடித்ததற்காக சம்பளமே வாங்கவில்லை.

சூர்யா, ஷாருகான் குறித்து சொன்னது:

மும்பையில் படப்பிடிப்பு நடந்தபோது சூர்யா சென்னையில் இருந்து விமானத்தில் வந்தார். விமான டிக்கெட் முதல் உதவியாளர்களுக்கு சம்பளம் வரையும் அவர் எதுவுமே கேட்கவில்லை. அத்தனையும் அவர் சொந்த செலவில் பார்த்துக்கொண்டார். அதேபோல் ஷாருக்கானும் கேரவன் கூட பயன்படுத்தவில்லை. அவரும் எந்த ஒரு சம்பளத்தையும் வாங்கவில்லை. இருவருக்கும் நான் மனதில் இருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த படத்துக்காக இன்னொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் அமிதாபச்சன். இந்தி பதிப்புக்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார் என்று கூறி இருந்தார்.

Advertisement