தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் ஞானவேல். இவர் நடிகர் அசோக்செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யாவை வைத்து ஜெய் பீம் படம் இயக்கி இருந்தார். இந்த படம் திரையரங்கில் ரீலிஸ் செய்யபடும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிரந்த சமயத்தில். இந்த படம் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.
என்ன தான் இந்த படம் அமேஸ்சான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிருந்தாலும். நல்ல படம் எதில் வெளியானால் என்ன என்று சூர்யா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம். இந்த படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார்.
ஜெய் பீம் படம் :-
எல்லா திரை பிரபலங்களும் வெற்றிக்காகவும் ,மாஸ்க்காகவும் இருக்கும் திரை கதைகளாக பார்த்து ஒடிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் சூர்யா கதைக்கு இது தான் தேவை என்று புரிந்து கொண்டு அவருக்காக கதை இல்லாமல் கதைக்காக நடித்திருந்தார். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் வெளிவந்து மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள்.
அதேசமயம் இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகியும் இந்த படம் குறித்த சர்ச்சை முடியவில்லை. இருந்தாலும், ‘ஜெய்பீம்’ பல பிரிவுகளில் விருது பெற்று சாதனை படைத்தது. பேசுபவர்கள் பேசட்டும் நமக்கு என்ன என்று ஜெய் பீம் இயக்குனர் தன் இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டார். ஆம், ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஞானவேலின் அடுத்த படம் :-
இயக்குனர் ஞானவேலின் அடுத்த படம் தற்போது தயாராகி வருகிறது. அவர் கையில் எடுத்துள்ள அடுத்த படமும் சர்ச்சைக்குரிய கதைக்களம் தான். அதாவது, மறைந்த தொழில் அதிபரான சரவணபவன் ராஜகோபால் வழக்கை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட உள்ளது. 2001 ஆம் ஆண்டு ஜீவஜோதி எனும் பெண்ணை மறுமணம் செய்து கொள்ளும் நோக்கில் அவரது கணவரை கடத்தி கொலை செய்ததாக ராஜகோபால் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக 2019ஆம் ஆண்டு ராஜகோபால் காலமானார். இதை தழுவி தனது அடுத்த படைப்பை திரைக்கு கொண்டுவரும் வேலையில் இருக்கிறார்.
ஜெய்பீம் படம் பார்த்து கண்கலங்கிய சீனர்கள் :-
சமீபத்தில் சீனாவில் உள்ள பெய்ஜிங் எனாற இடத்தில் சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சி ஒன்று நடந்து முடிந்தது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்பட்டது அப்போது அங்கிருந்து சீன மக்கள் படத்தை பார்த்து கண்கலங்கி அழ ஆரம்பித்து விட்டனர். அவர்களிடம் இதைப் பற்றி கேட்ட பொழுது வெளிநாட்டவர்கள் எங்களுக்கே அவர்கள் பட்ட துயரம், வலிகள், மன வேதனைகள் அனைத்தையும் எங்களாளே உணர முடிகிறது என்றவாறு சொல்லிக் கொண்டு கண் கலங்கினர். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் டிரண்டிங்காகி கொண்டிருக்கிறது மேலும் சீனர்கள் ஒரு தமிழ் படத்தை பார்த்து கண்கலங்கி அழுதுள்ளனர் என்று படத்தை நினைத்து பெருமை கொள்வதா. இல்லை இப்படி ஒரு துயர சம்பவம் நம் தமிழகத்தில் தான் அரங்கேறியது என்று தலை குனிவதா என்று தெரியவில்லை.