சூர்யாவின் அடுத்த பட பெயர் NGK என்றால் என்ன தெரியுமா ? வெளிவந்த தகவல் !

0
1097
Actor Surya

இயக்குனர் செல்வராகவனின் படமென்றால் எப்போதும் தனித்துவமாக இருக்கும். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் என ந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். சின்ன சின்ன நடிகர்களை வைத்து வித்யாசமாக ஹிட் கொடுத்து வந்த செல்வராகவன் தற்போது முதன் முதலாக ஒரு மாஸ் ஹீரோவுடன் இணைந்துள்ளார்.

surya-NGK-First-Look

சூர்யாவின் 36வது படத்தை இயக்கும் பொறுப்பு செல்வராகவினிடம் வந்துள்ளது. இந்த படத்தின் சூட்டிங் இன்னும் துவங்கவில்லை. ஆனால், செலவராகவன் பிறந்தநாளான நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிப்பட்டது.

வழக்கம் போல வித்யாசமாக செல்வராகவன் படத்திற்கு ஏற்ற அம்சங்களுடன் இருந்தது அந்த பர்ஸ்ட் லுக். படத்திற்கு, NGK என பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் , NGK என்றால் என்ன என குறிப்பிடப்படவில்லை. இதனால் குழம்பி போன ரசிகர்களை தங்களுக்கு பிடித்த விரிவாக்கத்தை கொடுத்து வருகின்றனர்.ஆனால், அந்த படத்தின் தலைப்பிற்கான அர்த்தம் என்ன என ஓரளவிற்கு தெரியவந்துள்ளது. NGK – நந்த கோபாலன் குமரன் என பொருளபடுகிறது.