‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகியதாக பாலா அறிக்கை. அதற்கு அவர் சொல்லியுள்ள காரணத்தை பாருங்க.

0
1150
Vanangaan
- Advertisement -

தன்னுடைய ‘வணனங்கான் ‘ படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக இயக்குனர் பாலா அறிக்கை வெளியிட்டுள்ளது சூர்யாவின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.

- Advertisement -

இதனை தொடர்ந்து சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூர்யா – பாலா கூட்டணியில் படம் ஒன்று உருவாகிவந்தது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்தது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். நந்தா திரைப்படம் சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்து இருந்தது.

பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் சூர்யாவின் 41வது திரைப்படம் ஆகும். மேலும், இந்த படத்திற்காக மதுரையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமில்லாமல் சூர்யாவுடன் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ உட்பட பலர் நடித்து வந்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் சூர்யா கோபத்துடன் படப்பிடிப்பை விட்டு வெளியேறியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கை வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்ம சங்கடம் கூட நேர்ந்து விடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்து இருக்கிறோம் அதில் அவருக்கும் மிகுந்த வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் படப் பணிகள் தொடரும் நன்றி’

Advertisement