புது நடிகைக்கு தன் பக்கத்துக்கு அறையில் ரூம் போட்ட பாலா – வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலக இதான் காரணமா ? நடிகர் அளித்த பேட்டி.

0
755
Surya
- Advertisement -

தன்னுடைய ‘வணனங்கான் ‘ படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக இயக்குனர் பாலா அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது சூர்யா வெளியேறியதற்காக வேறு ஒரு காரணத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். சூர்யா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ , ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேப்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூர்யா – பாலா கூட்டணியில் படம் ஒன்று உருவாகிவந்தது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

- Advertisement -

வணங்கான் படம் :

இந்த படம் சூர்யாவின் 41வது திரைப்படம் ஆகும். மேலும், இந்த படத்திற்காக மதுரையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமில்லாமல் சூர்யாவுடன் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ உட்பட பலர் நடித்து வந்தனர்.இந்த நிலையில் இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன்.

ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.என் மீதும் இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கை வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்ம சங்கடம் கூட நேர்ந்து விடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.எனவே, வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்து இருக்கிறோம்.

-விளம்பரம்-

சூர்யாவின் முடிவு :

அதில் அவருக்கும் மிகுந்த வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் படப் பணிகள் தொடரும் நன்றி’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதை தொடர்ந்து சூர்யா ‘வணங்கான்’ படத்தின் தயாரிப்பு முடிவில் இருந்தும் விலகினார்.

பயில்வான் பேட்டி :

இந்த நிலையில் நம் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்து இருந்த பயில்வான் ரங்கநாதன், இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது பாலா தான் தங்கி இருந்த அறைக்கு பக்கத்தில் நாயகிக்கு அறை போட்டுக் கொடுத்ததாகவும் சூர்யாவிற்கு 15 கிலோமீட்டர் தள்ளி சூர்யாவிற்கு ரூம் போட்டு கொடுத்ததாகவும் இதனால் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் ஒரு சிறிய பிரச்சனை எழுந்து விட்டது. பின்னர் ஷூட்டிங்கின் போது இதுகுறித்து பாலாவிற்கும் சூர்யாவிற்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறியுள்ளார்.

Advertisement