நான் புர்கா, அணியாத போதும், அவர் மகள் புர்கா அணிய போகிறேன் என்று சொன்ன போதும் ஏ ஆர் ரஹ்மான் இதான் சொன்னார் – ரஹ்மானின் சகோதரி சொன்ன பேட்டி.

0
1682
ARRahman
- Advertisement -

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஏ ஆர் ரஹ்மான் மகள் பொது நிகழ்ச்சியில் புர்கா அணிந்து வந்தது பெரும் பேசுபொருளானது. ஏ ஆர் ரஹ்மான் தங்கள் மகளை அடிமைபடுத்தி வைத்து இருக்கிறார் என்று விமர்சனங்கள் எல்லாம் எழுந்தது. ஆனால், இதுகுறித்து பேசிய அவரின் மகள்,, புர்கா அணிவது என்னுடைய விரும்பம், என் பெற்றோர்கள் எனக்கு நான் விரும்பியதை செய்ய சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள் என்று கூறி பதிலடி கொடுத்துஇருந்தார் . இப்படி ஒரு நிலையில் தங்கள் குடும்பம் இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்தும் வீட்டின் பெண்கள் ஹிஜாப் அணிவது குறித்தும் ஏ ஆர் ரஹ்மானின் அக்கா அளித்து இருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது .

-விளம்பரம்-

தங்கள் குடும்பம் இஸ்லாம் மதத்திற்க்கு மாறியது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஏ ஆர் ரஹ்மானின் அக்கா ‘என் அஜ்ஜா மயிலாப்பூர் கோவிலில் பஜனை செய்வார், அப்பா பல இசை அமைப்பாளர்களுக்கு ஏற்பாட்டாளராகவும், நடத்துனராகவும் இருந்தார். என் தந்தை இறந்த பின்னர் நான்கு குழந்தைகளின் ஒற்றைப் பெற்றோரான என் அம்மாவால் ஒவ்வொருவரையும் பூர்த்தி செய்ய முடியாது என்று அம்மாவின் நண்பர்கள் அழுத்தம் கொடுத்து சமாதானப்படுத்தினர். நான் படித்து முடித்த பிறகு, நான் மேலும் தொடர விரும்பியபோது, ​​​​எனக்கு திருமணம் ஆனது. அப்போது எனக்கு 21 வயது. அம்மா சூஃபித்துவத்தால் கடுமையாக ஈர்க்கப்பட்டர் , முழு குடும்பமும் மதம் மாறியது.

- Advertisement -

ஆனால் நான் மதம் மாற பத்து வருடங்கள் எடுத்தேன். நான் அதை அவசரப்படுத்த விரும்பவில்லை. எல்லா சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து, ஐந்து வேளை நமாஸ் செய்யும் பழக்கத்தைப் பெற எனக்கு இன்னும் பத்து வருடங்கள் தேவைப்பட்டன.எனது பெயரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ​​முதலில் ஷனாஸைப் பற்றி நினைத்தேன், ஆனால் ரைஹானா என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ரைஹானா சேகர் ஆனேன்.

நான் அப்பாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பினேன், அதனால் அவர் பெயர் என் பெயரின் ஒரு பகுதியாக மாறியது.நான் ஏஆர் ரைஹானாவாக இருக்க வேண்டும் என்று இசைத்துறை விரும்புகிறது, அது சரியா என்று ரஹ்மானிடம் கேட்டபோது, ​​‘ஏ ஆர்’ என்றால் ‘கடவுளின் பெயர்/கடவுளின் பெயரை வைத்தது’ என்று கூறினார். அதே போல ஹிஜாப் குறித்து சமீபத்தில் பேசிய அவர் ‘நாங்கள் எல்லாம் புர்கா போட வேண்டும், போடக்கூடாது என்று ரகுமான் சொன்னதே கிடையாது.

-விளம்பரம்-

அவர் யாரையும் கட்டாயப்படுத்தியதே கிடையாது, நாங்கள் இஸ்லாமிற்கு மதம் மாறிய போது கூட அவர் நாங்கள் எல்லாம் புர்கா போட வேண்டும் என்று அவர் சொன்னது கிடையாது. நாங்கள் நாங்களாக இருந்தோம். நாங்கள் விரும்பியதை எப்போதும் நாங்கள் செய்தோம் அதேபோல அவரது மகள் புர்கா அணிந்த போது உனக்கு சவுகரியமாக இருக்குமா இது போன்ற வெப்பமான நாடுகளில் உனக்கு வியர்த்துக் கொட்டுமே என்று கேட்டோம்.

அதற்கு அவள் எனக்கு துர்கா அணிய வேண்டும் என்று தோன்றுகிறது. யார் பேச்சையும் நான் கேட்கமாட்டேன் என்றால். இதனால் இது உன்னுடைய விருப்பம் என்று நாங்கள் கூறி விட்டோம். நீ ஒன்றும் அவுத்து போடவில்லை மூடி தான் சொல்கிறாய் அதில் என்ன தப்பு, அவத்து போட்டால் தான தப்பு என்று சொல்லிவிட்டோம் என்று வேடிக்கையாக பேசி இருக்கிறார். அதே போல ஏ ஆர் ரஹ்மான் அக்கா இஸ்லாம் மதத்தை பின் பற்றினாலும் அவரது மகனான ஜி வி பிரகாஷ் இந்து மதத்தத்தை தான் பின்பற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement