தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், கருணாகரன், சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஜோஜு ஜார்ஜ் தூத்துக்குடியில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார். இவரிடம் அடியாட்களாக சூர்யாவின் அப்பா வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் சூர்யாவின் தந்தை சண்டையில் இறந்து விடுவதால் சூர்யாவை ஜோஜு ஜார்ஜின் மனைவி தான் எடுத்து வளர்க்கிறார். தனக்கு அடியாளாக சூர்யாவை ஜோஜு ஜார்ஜ் வளர்கிறார். இதற்கிடையில் சூர்யா, பூஜா காதலிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராகிறார்கள்.
அப்போது சூர்யா அடிதடியை விட்டு விட முடிவு செய்தார். இன்னொரு பக்கம் கேரளாவில் கொள்ளையடித்த அரசு கருவூல பொருட்களை எல்லாம் தன்னுடைய வளர்ப்பு தந்தையான ஜோஜு ஜார்ஜிக்கு தெரியாமலேயே சூர்யா மறைக்கிறார். இதை அறிந்த ஜோஜு ஜார்ஜ், பூஜாவை கொலை செய்ய நினைக்கிறார். இதனால் சூர்யா தன்னுடைய வளர்ப்பு தந்தை ஜோஜு ஜார்ஜ் கையே வெட்டி விடுகிறார். இதனால் சூர்யா சிறைக்கு செல்கிறார்.

இதனால் பூஜா நாட்டை விட்டு அந்தமான் தலைமறைவாகிறார். பின் பூஜாவை தேடி திரையிலிருந்து சூர்யா தப்பித்து அந்தமானுக்கும் செல்கிறார். சூர்யா இருக்கும் இடத்தை அறிந்த ஜோஜு ஜார்ஜ் தன்னுடைய அடியாட்களுடன் அந்தமானுக்கு செல்கிறார். இதற்கிடையில் அந்தமானின் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரௌடி கும்பலின் தலைவனுடன் சூர்யாவுக்கு பகையும் ஏற்படுகிறது. அனைத்து பிரச்சனைகளையும் சூர்யா முறியடித்தாரா? அரசு பொருட்கள் நிலை என்ன? பூஜா என்ன ஆனார்? சூர்யா- பூஜா இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதையே.
https://www.youtube.com/watch?v=AcduNQmwB5U
படம் 90 காலகட்டத்தில் நடப்பதால் அந்த ஸ்டைலான லுக்கில் சூர்யா நடித்திருக்கிறார். சண்டை காட்சிகள் எல்லாம் சூர்யா வெளுத்து வாங்கி இருக்கிறார். அடிதடி கொலை என்று திரியும் சூர்யாவின் வாழ்க்கையில் பூஜா வருவதால் அவருடைய வாழ்க்கையே அழகாக மாறுகிறது. நடிப்பு, ஆக்சன் என அனைத்திலுமே சூர்யா ஸ்கோர் செய்து இருக்கிறார். இவரை அடுத்து வளர்ப்பு தந்தையாக வரும் ஜோஜு ஜார்ஜ் நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது.
பூஜா தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். ஒரு கிருஷ்ணர் கதையை இந்த காலகட்டத்திற்கு ஏற்ப கையில் இயக்குனர் எடுத்திருக்கிறார் என்று தான் சொல்லணும். அதிலும் மக்களை மீட்க கடவுள் வருவார் என்று என்று சொல்வதும், கடவுளாக சூர்யா வருவதும், அரசன் எனப்படும் அரக்கர்களை அவர் கொள்வதும் போல கதையை கனெக்ட் செய்யும் விதமெல்லாம் நன்றாக இருந்தாலுமே அதை கொண்டு சென்ற விதத்தில் சுவாரசியம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

ஒரு சில காட்சிகள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நினைவிற்கு கொண்டு வருகிறது. சில நடிகர்கள் படத்திற்கு எதுக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு இயக்குனர் கொடுத்திருக்கிறார். நிறைய கதாபாத்திரம் இருக்கிறது. காதல், சண்டை, யுத்தம் எல்லாமே இருந்தாலும் அதை சுவாரசியமாக கொண்டு செல்லவில்லை. டெக்னிக்கல் நன்றாக இருக்கிறது. மற்றபடி ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் கொஞ்சம் குறைவுதான். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.
நிறை:
சூர்யா நடிப்பு, ஒட்டுமொத்த படத்தையுமே தாங்கி சென்றிருக்கிறார்
பூஜா-சூர்யா காதல் காட்சி நன்றாக இருக்கிறது
முதல் பாதி ஓகே
படத்தின் டெக்னிக்கல் விஷயம் நன்றாக இருக்கிறது.
கதைக்களம் ஓகே
குறை:
இரண்டாம் பாதி சுதப்பிவிட்டார்
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்
படத்தை சுவாரசியமாக கொடுத்திருக்கலாம்
மொத்தத்தில் ரெட்ரோ - இயக்குனர் கொஞ்சம் தடுமாறி விட்டார்






