மகளின் 10th ரிசல்ட் – மகிழ்ச்சியில் ஆழ்ந்து சூர்யா குடும்பத்திற்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி. வீடியோ இதோ .

0
287
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம்.

-விளம்பரம்-

இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதோடு இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதனை தொடர்ந்து சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை சூர்யா வேட்டையாடும் சூரசம்ஹாரம் செய்வது தான் எதற்கும் துணிந்தவன்.

- Advertisement -

எதற்கும் துணிந்தவன்:

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக இருந்ததால் செம மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சூர்யா– பாலா கூட்டணி:

அந்த வகையில் தற்போது சூர்யா – பாலா கூட்டணியில் படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் சூர்யாவின் 41வது திரைப்படம் ஆகும். இதை அடுத்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சூர்யா மகளின் மதிப்பெண்:

இந்நிலையில் சூர்யாவின் மகள் பத்தாவது பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்திருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில் சூர்யாவின் மகள் தியா எடுத்த மதிப்பெண்கள்,

தமிழ்- 95
ஆங்கிலம்-99
கணிதம்- 100
அறிவியல் -98
சமூக அறிவியல் -95

குவியும் வாழ்த்துக்கள்:

மேலும், எதிர்பார்த்ததைவிட மதிப்பெண்ணை தன்னுடைய மகள் பெற்றுள்ளதால் சூர்யாவும் அவருடைய குடும்பத்தினரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள். சூர்யா மகள் பத்தாவது வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதற்கு பலரும் வாழ்த்துக்கள் குவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மகள் ரிசல்ட் வந்து சந்தோஷத்தில் சூர்யா குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஏகப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

Advertisement