விளம்பரத்துக்காக பேசாதீங்க.! விஜயை மறைமுகமாக தாக்கி பேசினாரா சூர்யா ? வைரலாகும் வீடியோ.!

0
1202
VIJAY-SURYA

சினிமா திரை உலகில் சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய கால கட்டங்களில் வளர்த்துக்கொண்டு தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகர் சூர்யா. தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.சூர்யா அவர்கள் நடிகர் என்ற பெருமையும், மமதையும் சிறிதளவும் இல்லாத ஒரு சிறந்த நடிகர். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஜாக்பாட் நடிகையாக இருக்கும் ஜோதிகாவின் கணவரும் ஆவார்.இவர் ஒரு படத்திலேயே மாறுபட்ட வேடங்களை போட்டு நடிப்பதில் கமலஹாசனுக்கு பிறகு சாதனை படைத்துள்ளார்.

vijay

இதனால் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று இருக்கிறார்.சூர்யா திரையுலகில் நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் பங்கு ஆற்றி வருகிறார்.மேலும் சூர்யாவிற்கு அரசியலில் எந்த ஒரு ஈடுபாடும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.சூர்யா திரையுலகில் மட்டுமில்லாமல் பொதுநல சேவைகள் செய்வதிலும் சிறந்தவர். இவர் அகரம் என்ற அறக்கட்டளை ஒன்றை பொது நலனுக்காக நடத்தி வருகிறார். இது எந்த ஒரு லாப நோக்கம் அல்லாத தொண்டு நிறுவனமாகும். ஏழைக்குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதாககும்.

- Advertisement -


இதையும் பாருங்க : அஜித்தை தொட்டு பேசாதீங்க.! தயாரிப்பாளர் சந்தித்த சங்கடம்.! அஜித் என்ன செய்தார் பாருங்க.!

சூர்யா தமிழ் திரை உலகில் மணிரத்தினம் அவர்களின் தயாரிப்பில் வசந்த்தின் இயக்கத்தில் உருவான நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.ஆனால்,முதல் படமே அவருக்கு பெரிய அளவில் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து நந்தா, மௌனம் பேசியதே, பிதாமகன், பேரழகன், கஜினி, ஏழாம் அறிவு, மாற்றான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.ஆனால், சில காலமாகவே இவருடைய படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.தற்போது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் தமிழ் திரையரங்கங்களில் மாஸ் காட்டி பட்டய கிளப்புகிறது.

இந்த படம் மக்களிடையே அதிக வரவேற்பையும், நல்ல வசூலையும் கூட பெற்று தந்தது. மேலும், இந்த படம் பல எதிர்ப்புகளுக்கு பிறகு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இந்த காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசிய வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.மேடையில் சூர்யா பேசியது, நடிகர்கள் அவர்களுடைய பட நிகழ்ச்சி விழாவில் கலந்து கொள்ளும் போது அரசியலைப் பற்றி பேச வேண்டாம். அதற்கான இடமும் இது கிடையாது. அப்படி அரசியல் பற்றி பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

மேலும் படத்திற்கு விளம்பரம் செய்ய வேண்டுமே தவிர எதையுமே விளம்பரத்திற்காக செய்யக் கூடாது.அதற்கான மேடையும் இது இல்லை என்று கூறினார். எங்க? எது பேசணுமா அங்க தான் அதை பேசவேண்டும். எதையுமே விளம்பரத்திற்காக பண்ணக்கூடாது.அப்படி செஞ்சா ரொம்ப தப்பா போயிடும், வேண்டாமென்று என்று கூறினார்.சூர்யா உடைய வார்த்தைகள் எல்லாம் விஜய் அவர்கள் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய வார்த்தைகளுக்கு எதிராக உள்ளது என்று ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும், விஜய் பேசிய வார்த்தைகளை மனதில் வைத்து கொண்டு தான் சூர்யா இப்படி பேசுகிறார் என்று ரசிகர்கள் இணயங்களில் கருத்துக்களையும் தெரிவித்து விடுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement