ரியோ ராஜின் ‘ஸ்வீட்ஹார்ட்’ ரசிகர்களை கவர்ந்ததா? படம் எப்படி இருக்கு – முழு விமர்சனம் இதோ

0
191
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரியோ ராஜ். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ஸ்வீட் ஹார்ட். யுவன் சங்கர் ராஜா தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அதோடு இந்த படத்திற்கு அவர் தான் இசையும் அமைத்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வீனித் எஸ் சுகுமார் இயக்கியிருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கதாநாயகன் ரியோ 5 வயதிலேயே தன்னுடைய அம்மாவை பிரிந்து விடுகிறார். அதன் பின் இவர் 12 வயதில் தன்னுடைய அப்பாவை இழந்து விடுகிறார். அதற்குப்பின் தனியாக தான் ரியோ வளர்கிறார். ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து கடைசி வரை காதலோடு வாழ முடியாது என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார். காலங்கள் மாற மாற ரியோவின் வாழ்க்கையும் மாறுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கதாநாயகி கோபிகாவை ரியோ சந்திக்கிறார்.

- Advertisement -

இருவருமே பேசி பழகுகிறார்கள். அப்போது கதாநாயகி கோபிகாவிற்கு ரியோ மீது காதல் வருகிறது. ஆனால், ரியோ அந்த காதலை ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். பின் நெருங்கியும் பழகுகிறார்கள். இதனால் கோபிகா கர்ப்பமாகிறார். இந்த குழந்தை தனக்கு வேண்டும் என்று கோபிக்காக சொல்ல, ஆனால் குழந்தையை கலைத்து விடலாம் என்று ரியோ சொல்கிறார். அதற்குப்பின் என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தின் ஹீரோ ரியோ, கதாநாயகி கோபிகா இருவரின் நடிப்பும் படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்திருக்கிறது. காதலர்களுக்கு இடையே வரும் வாக்குவாதம், ரொமன்ஸ், எமோஷன் என அனைத்து காட்சிகளுமே சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனராக இருந்தாலும் எடுத்துக் கொண்ட கதைகளம் நன்றாக இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த கால இளைஞர்களை கவரும் வகையில் இயக்குனர் படத்தை எடுத்திருக்கிறார். அதுவே படத்திற்கு பலம் தான். முதல் பாதி சுமாராக சென்றாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றிருக்கிறது. குறிப்பாக கடைசி 40 நிமிட காட்சிகள் பார்வையாளர்களை கலங்க வைத்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி தான் படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். அதேபோல் படத்திற்கு பக்க பலமே யுவன் சங்கர் ராஜாவின் இசை தான். பாடல்களுமே ரசிக்கும் வகையில் இருக்கிறது. பின் ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒருமுறை சென்று படத்தை பார்க்கலாம்.

நிறை:

ரியோ ராஜ், கோபிகா நடிப்பு நன்றாக இருக்கிறது

யுவனின் பின்னணி இசை, பாடல்கள் அருமை

கதைகளம் நன்றாக இருக்கிறது

இயக்கம் சூப்பர்

கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது

குறை :

முதல் பாதி பொறுமையாக செல்கிறது.

இளைஞர்களை மட்டும்தான் இந்த படம் கவர் செய்யும்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் ஸ்வீட் ஹார்ட் – இளைஞர்கள் மனதை வென்றது

Advertisement