2k கிட்ஸ் எங்கள கிரிஞ்ச்னு இப்படி பண்ணாங்க ‘சீக்கிரமே இதோட வரோம்’ – டெலிவரி காதல் ஜோடியின் பேட்டி

0
1285
Delivery Kadhal
- Advertisement -

நாங்கள் பன்னுவது கிரிஞ்ச் என்றால் 80, 90களில் வந்த தமிழ் சினிமாவோட காதல் காட்சிகள பார்த்தாலே எங்க வீடியோ மாதிரிதான் இருக்கும்.கிரிஞ்யாக வீடியோ போட்டு வெப் சீரியஸ் எடுக்க போகும் தம்பதிகள். யூடியூப், இன்ஸ்டாகிராமென் என் சோசியல் மீடியாவில் எங்கே பார்த்தாலும் இந்த இரண்டு முகங்களையும் நீங்கள் கடக்காமல் வந்திருக்க முடியாது.யார்றா இது பழைய ஜோக் தங்கதுரைக்கே டஃப் குடுக்குறதுன்னு தேடிப்போனா, ரீல்ஸ் ஷூட்டிங்கில் படு பிசியாக இருந்தார்கள் யாமினியும் சிலம்பரசனும், யாமினி கடித்த கொய்யாப்பழத்தை சிலம்பரசன் பறிக்க, என்னடா என வழக்கம்போல யாமினி கேட்க, அனில் கடிச்ச பழத்த விட நீ கடிச்ச பழத்துக்கு தாண்டி ருசி அதிகம் என சுட சுட ரீல்ஸ் தயாராகிக்கொண்டிருந்தது.

-விளம்பரம்-

சேனல் பெயர் :-

எங்க சேனல் பேரு ராஜன் பரம்பரை, சேனல் பேர பார்த்ததும் எல்லோரும் எங்கள டைரக்டர் வெற்றிமாறனோட முரட்டு பக்தர்கள் போல, அதான் வடசென்னைல வர்ற ராஜன் கேரக்டர சேனலுக்கு வச்சுட்டோம்னு நினைப்பீங்க, ஆனா உண்மை அது இல்ல, இந்த சேனலை ஆரம்பிச்ச என் மச்சான் பேரு வரதராஜன், அதுல இருந்து ராஜன உருவிட்டோம். நானும் ராஜனும் மாமன் மச்சான் அப்டிங்கிறதால சேனலுக்கு ராஜன் பரம்பரைன்னு பேரு வச்சுட்டோம் என அறிமுகத்துலேயே நம்மை டரியலாக்கினார் சிலம்பரசன்.

- Advertisement -

நாங்கள் சினிமா இன்ஸ்டியட் மாணவர்கள் :-

எங்களுக்கு சொந்த ஊரு கிருஷ்ணகிரி, நான், வரதராஜன் எல்லாரும் சினிமா இன்ஸ்டடிய்ட் மாணவர்கள், சினிமா தான் எங்களோட அல்டிமேட் இலக்கா இருந்துச்சு. அப்போ தான் வெப்சீரிஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணுனோம், அதுக்கு முன்ன இரண்டு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு நல்ல நல்ல கண்டென்ண்டா குடுத்தோம், நம்புங்க நிஜமாவே நல்ல கண்டெண்ட்தான். நம்ம ஃபேஸ்புக்ல ஐயாயிரம் ஃப்ரண்ஸ் வாட்சப்ல ஆயிரம்னு எல்லாரும் பார்த்தாலே சேனல் செம்மய வந்துருக்கனும். யாரப்பார்த்தாலும் ஸ்டேட்டஸ்ல வைக்கிற வீடியோ பார்த்துட்டு சூப்பர் சூப்பர்னு சொல்லுவாங்க,

எங்கள் வீடியோ எடுத்து போட்ட சேனல்கள் வைரல் ஆனது எங்கள் சேனல் ?

ஆனா சேனல்ல பார்த்தா வியூஸ் பத்து தான் இருக்கும், அதுல நானே நாலு தடவ பார்த்துருப்பேன்னா பார்த்துக்கோங்க. அப்றம் தான் முடிவு பண்ணுனோம், அதே நேரத்துல இன்னொரு சேனல்ல டெலிவரி காதல்னு கிரிஞ்ச் கண்டெண்ட்டா எடுத்து பண்ண ஆரம்பிச்சாங்க, அவுங்கள பகடி பண்ணலாம்னு நண்பனோட டி-ஷர்ட்ட போட்டு ரீல்ஸ் ஆரம்பிச்சோம். எங்க சேனல விட எங்க வீடியோ எடுத்துப்போட்ட மத்த எல்லா சேனல்லயும் செம வைரல் ஆச்சு. அப்போ தான் புரிஞ்சது இங்க நல்லது பண்ணா போயி சேர லேட்டாகும் போலன்னு

-விளம்பரம்-

யாமினிக்கு சீரியலில் நடிப்பததே லட்சியம் :-

அவர்களது சொந்த ஊரு சென்னை தான். எம்.எஸ்.சி முடிச்சேன், இன்ஸ்டாகிராம்ல சும்மா ரீல்ஸ் பண்ணிட்டு இருந்தப்போ எங்க மாமா மூலமாதான் இந்த சேனலோட டைரக்டர் வரதராஜன் அண்ணன் அறிமுகம் ஆனாங்க. வெப் சீரிஸ் பண்ணலாம்னு தான் ஆரம்பிச்சோம் அப்டியே இந்த பக்கம் வந்துட்டோம். நான் நடிக்கிறேன்னு வீட்ல சொன்னப்போ யாரும் ஏத்துக்கல, நிறைய சொல்லி புரிய வச்ச பிறகு அப்பா அம்மாவுக்கு சந்தோஷம் ஆனாலும் சொந்தக்காரங்க இன்னும் ஏத்துக்கல, படிச்சுட்டு கல்யாணம் பண்ணாம இப்படி நடிப்புன்னு போறேன்னு காதுபடவே சொல்லிருக்காங்க.

நெகட்டிவெட்டி பப்ளிஸ்சிட்டியாக மாறிபோனது :-

எனக்கு தமிழ் சீரியல்ல நடிக்கணும்னுகிறது பெரிய ஆசை. ஆரம்பத்துல ஃப்ரெண்ஸ் நடிப்ப பத்து கருத்து சொல்லுவாங்க, அது கேட்டு கேட்டு கொஞ்சம் கொஞ்சமா மாத்திப்பேன். சீக்கிரமே சீரியல்ல நடிப்பேன்னு நம்புறேன் என்றார். முதல்ல நம்மள யாருன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு இத பயன்படுத்துனோம், இப்டி கிரிஞ்சா பன்றது நாங்களா பண்ணல, 80, 90களில் வெளிவந்த தமிழ் சினிமாவோட காதல்காட்சிகள பார்த்தாலே எங்க வீடியோ மாதிரிதான் இருக்கும். அதையே தான் நாங்க மறு உருவாக்கம் பண்றோம், ஆனா 2கே கிட்ஸ் கிரிஞ்சுன்னு எங்கள நெகடிவ் பப்ளிசிட்டி குடுத்து ரீச் ஆக்கிட்டாங்க. கண்டிப்பா சீக்கிறமே நீங்களே ஆச்சர்யப்படுற மாதிரி நல்ல வெப்சீரீஸோட வருவோம்.

Advertisement