6 வருடத்திற்கு முன் நடத்த மகளின் திருமணத்தில் ட்ரம்ஸ் வசித்துள்ள டி ஆர். சிவமணியின் ரியாக்ஷன்.

0
8595
tr
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் டி ராஜேந்தர். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட இயக்குனர், பாடகர், இசை கலைஞர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். அதோடு டி ராஜேந்தர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு பல திறமைகளைக் கொண்டவர். இவர் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். மூத்த மகன் சிலம்பரசன், இலக்கியா, குறளரசன் ஆவார். டி ராஜேந்தர் அவர்கள் திரை உலகில் பல சாதனைகளை செய்து உள்ளார். மேலும், இவருடைய படத்தில் அடுக்குமொழி வசனம் இடம் பெரும். அடுக்குமொழி வசனம் பேசுவது இவரை விட்டால் வேறு யாருக்கும் வராது. அந்த அளவிற்கு அடுக்குமொழி வசனத்தில் தனித்துவம் பெற்றவர்.

-விளம்பரம்-
டி.ராஜேந்தர் மகள் இலக்கியா - அபிலாஷ் திருமண வரவேற்பு

- Advertisement -

இவருடைய மூத்த மகன் சிலம்பரசனும் தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக தொடங்கி புகழ் பெற்று வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த கவண் என்ற படத்தில் டி ராஜேந்திரன் அவர்கள் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. தற்போது இவர் ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன்னால் டி ராஜேந்தர் அவர்கள் தன்னுடைய மகள் இலக்கியா திருமணத்தின் போது டிரம்ஸ் வாசித்து உள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. டி.ராஜேந்திரன் அவர்களின் மகள் இலக்கியா ஆறு வருடத்திற்கு முன்னால் அபிலாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அபிலாஷ்–இலக்கியா திருமணம் பண்டிகை போன்று கோலாகலமாக நடந்து முடிந்தது.

இதையும் பாருங்க : வந்து நடி, பாடு என நான் அவரை மிரட்டினேன். விஜய் குறித்து ராதிகா சொன்ன விஷயம் . வீடியோ இதோ.

இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிவமணியின் ட்ரம்ஸ் கச்சேரி நடைபெற்றது. அப்போது சிவமணியிடன் இருந்து ட்ரம்ஸ் ஸ்டிக்கை பிடிங்கி நடிகர் டி ராஜேந்திரன் அவர்கள் டிரம்ஸ் வாசித்து இருந்தார். இதை பார்த்து சினிமா பிரபலங்களும், மக்களும் அசந்து போய் நின்றார்கள். தற்போது டி ராஜேந்திரன் அவர்கள் தன் மகள் கல்யாணத்தில் டிரம்ஸ் வாசித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் டி ராஜேந்திரன் திறமையை யாராலும் முறியடிக்க முடியாது, பல திறமை கொண்டவர், சிறந்த கலைஞர் என்றெல்லாம் பாராட்டி புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். அதே போல் கடந்த ஆண்டு டி ராஜேந்திரனின் இளைய மகன் குறளரசன் அவர்களுக்கும் திருமணம் நடை பெற்றது.

-விளம்பரம்-
டி.ராஜேந்தர் மகள் இலக்கியா - அபிலாஷ் திருமண வரவேற்பு

குறளரசன் தான் காதலித்த இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கூட குறளரசன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். டி ஆர் ராஜேந்திரன் அவர்களின் இளைய பிள்ளைகள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. ஆனால், சிம்பு தான் சிங்குலாக உள்ளார். காலங்கள் செல்ல செல்ல சிம்புவுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. மேலும், சமூக வலைதளங்களிலும் சிம்பு திருமணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். தற்போது சிம்பு அவர்கள் மாநாடு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறா

Advertisement