வந்து நடி, பாடு என நான் அவரை மிரட்டினேன். விஜய் குறித்து ராதிகா சொன்ன விஷயம் . வீடியோ இதோ.

0
5833
Vijay Radhika
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். பொதுவாக சினிமா பிரபலங்கள் விட்டுக்கொடுத்தால் இவரைப் பற்றி கேள்விகள் இல்லாமல் இருக்காது. அதிலும் இவருடன் நடித்த நடிகர் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும்? அந்த வகையில் விஜயுடன் இது எங்கள் நீதி மற்றும் தெறி போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் குறித்த சுவாரஸ்யமான தகவல் சிலவற்றை கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் நடித்த ராதிகா தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களின் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இதுவரை சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார். சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வரும் ராதிகா, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடிஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையும் பாருங்க : விஜய் படத்தில் வாலி எழுதிய பாட்டை தூக்கிவிட்டு நண்பர் எழுதிய பாட்டின் பேப்பரை வைத்துள்ள மிஸ்கின்.

- Advertisement -

இந்தநிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராதிகா விஜய் மற்றும் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார் அப்போது பேசிய அவர் இது எங்கள் நீதி படத்தில் விஜயுடன் நான் நடிக்கும்போது விஜய் மிகவும் சின்ன பையன், வந்து நடி, பாடு என நான் அவரை மிரட்டினேன். விஜய் இவ்வளவு பெரிய நடிகராக, இவ்வளவு பெரிய மனிதராக வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று. அவரது பெற்றோர்களை போல அவரது வளர்ச்சியையும் புகழையும் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார் நடிகை ராதிகா.

மேலும் விஜய்யை நேரில் சந்தித்தால் நீங்கள் அவரிடம் என்ன கேள்வியை கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு பதில் கூறிய ராதிகா, எப்போது மாறின என்றுதான் கேட்பேன், ஏனென்றால் விஜய் நான் சிறு வயது முதலே பார்த்துக்கொண்டிருக்கிறேன் அவர் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர். ஆனால், தெற திரைப்படத்தில் அவரை பார்த்தபோது அவர் முற்றிலும் மாறி இருந்தார். அதிலும் ஷாட் என்று சொன்னவுடன் அவர் டக்கென்று மாறிவிட்டார். அப்போது கூட நான் கேட்டேன் எப்போது மாறினே என்று ஆனால், அதற்கு அவர் சிரித்தபடி பதில் அளித்துவிட்டார், ஆனால், இன்னொரு முறை அவரை நேரில் கண்டால் இந்தக் கேள்விக்கான பதிலை சொல்ல வைத்து விடுவேன் என்று கூறியுள்ளார் ராதிகா

-விளம்பரம்-
Advertisement