இதற்கு மட்டுமே மாசம் இத்தனை லட்சம் செலவு செய்றேன், இது மட்டும் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சது – டாப்ஸி டாப் சீக்ரெட்.

0
110
taapsee
- Advertisement -

டயட்டீஷனுக்கு மாதம் சம்பளமாக ஒரு லட்சம் ரூபாய் நடிகை டாப்ஸி தரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகை டாப்ஸி பன்னு. இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். மாடலிங் துறையில் நுழையும் முன் இவர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். அதன் பிறகு இவர் 2010 இல் சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் . அதனைத் தொடர்ந்து நடிகை டாப்சி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் நடிக்க சென்றார்.

- Advertisement -

பாலிவுட்டில் டாப்ஸி:

பின் இவர் பாலிவுட்டிலேயே அதிக கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது டாப்சி அவர்கள் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் லீட் நாயகியாக வலம் வர முடியவில்லை என்றாலும், இந்தியில் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் அவரை கவனிக்க வைத்தன. இதையடுத்து இவர் பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே நடிகை டாப்ஸி அவர்கள் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

டாப்ஸி டயட்டீசனுக்கு கொடுக்கும் சம்பளம்:

அந்த வகையில் தற்போது டாப்ஸி அவர்கள் விளையாட்டு வீராங்கனை ஒருவரின் பயோபிக் படத்தில் ஆர்வமாக நடித்து வருகிறார். இதற்காக இவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கான புகைப்படம் கூட சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. இந்த நிலையில் இவர் டயட்டிஸனுக்கு கொடுக்கும் மாத சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, நடிகை டாப்ஸி அவர்கள் தான் நடிக்கும் படத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மட்டுமில்லாமல் பயங்கரமான டயட்டும் பின்பற்றி வருகிறார்.

-விளம்பரம்-

டாப்ஸி அளித்த பேட்டி:

இதற்காக இவர் டயட்டிஸனுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறாராம். அது மட்டும் இல்லாமல் இது குறித்து டாப்ஸி, இந்த தகவல் என்னுடைய தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார். இதற்காக போய் இவ்வளவு செலவு பண்ணுகிறாயா? என்று கேட்பார். அதோடு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு போய் செலவு செய்வதற்கு பதிலாக இப்படி டயட்டீஸனுக்கு சம்பளமாக ஒதுக்குவதில் தப்பு ஒன்றும் இல்லை என்று டாப்ஸி கூறியிருக்கிறார்.

Advertisement