புகைப்படத்தில் இருக்கும் தனுஷ் பட நாயகி யாருனு தெரியுதா.! பாத்தா ஷாக் ஆவீங்க.!

0
366
Tapsee

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி அறிமுக படத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற இவர் அடுத்து நடித்த படங்கள் தோல்வி அடைய இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு மங்க தொடங்கியது.

அதன்பிறகு டாப்சி கோலிவுட் பக்கம் இருந்து விலகி பாலிவுட் பக்கம் தன் கவனத்தை செலுத்தினார். தற்போது ஹிந்தி படஉலகில் முன்னணி கதாநாயகியாக உள்ளார் இவருடைய அடுத்தடுத்த படங்கள் ஹிட் அடிக்க அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தலை காட்டி வருகிறார்.

- Advertisement -

இதையும் படியுங்க : வெளிநாட்டு மருமகளை இறக்குமதி செய்யப்போகும் கேப்டன்.! வைரலாகும் புகைப்படம்.! 

தென்னிந்திய சினிமா இவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் தற்போது பாலிவுட்டில் ஹிந்தி ரசிகர்கள் இவரை தலைமேல் தூக்கி கொண்டு ஆடுகின்றனர். அந்தளவுக்கு அம்மணி இந்தியில் மிகவும் தனித்துவமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான இந்திப் படங்கள் பலவும் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகை டாப்சி புதிய இந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. அதில் மிகவும் வயதான தோற்றத்தில் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் டாப்ஸியை கண்டு பலரும் வியந்துள்ளனர். இளம் வயதில் டாப்ஸி இப்படி ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளது பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement