இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் டாப்ஸி ‘ஆடுகளம்’ படத்தில் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

0
7627
aadukalam

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் தனுஷ், டாப்ஸி பண்ணு, கிஷோர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கேபி கருப்பு எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து இருப்பார். தனுஷின் சினிமா வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியமாக இந்த படம் அமைந்தது. ஆடுகளம் படத்திற்காக தனுஷ் அவர்கள் தேசிய விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

kathiresan

சேவல் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு கமர்சியல் படம். சுவாரசியமாகவும், எதார்த்தமாகவும் எடுக்கப்பட்ட இந்தப்படம் மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையை கண்ணுக்கு முன்னே நிறுத்தியது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதிலும் ‘வெள்ளாவி வெச்சு வெளுத்தாங்களா’ என்னும் பாடல் தான் செம ஃபேமஸ் ஆனது என்று சொல்லலாம். இந்த பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் நடிகை டாப்ஸி நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் நடிகை டாப்ஸியின் முதல் படமும் ஆடுகளம் தான். இந்நிலையில் இந்த படத்தில் முதலில் டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் திரிஷா தான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் - டாப்ஸி

இந்த படத்தில் நடிகை திரிஷா அவர்கள் பாதி வரை நடித்து இருந்தார். ஆனால், அதற்குப் பிறகு இந்த படத்திற்கு அவர் செட் ஆகவில்லை என்பதால் திரிஷாவை மாற்றிவிட்டு டாப்ஸியை நடிக்க வைத்தார் இயக்குனர் வெற்றிமாறன்.இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் பல ஸ்வாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில், நான் சினிமா துறைக்கு வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ இயக்குனர்களை சந்தித்து இருக்கிறேன் ஆனால் வெற்றிமாறன் மாதிரி ஒரு வித்தியாசமான இயக்குனர் பார்த்தது இல்லை.

-விளம்பரம்-

சிலபேர் கதை கூறும் போது நமக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னால் முகம் வேறு மாதிரி மாறி விடும் ஆனால் வெற்றிமாறன் எதுவும் எடுத்துக் கொள்ளமாட்டார் முதலில் வெற்றிமாறன் சொன்ன நகர வாழ்க்கை சம்பந்தமான கதை எனக்கு பிடிக்கவில்லை அதை அவரிடம் சொல்லிய பின்னர் மூன்று மாதம் கழித்து சென்னைக்கு வந்து ஒரு கதை சொன்னார் அது தான் ஆடுகளம்.

ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்திற்காக ஹீரோயின் தேர்வு செய்ய மும்பைக்குப்சென்றிருந்தோம். அப்போ டாப்ஸி போட்டோ கிடைக்க, விசாரிச்சோம். அவங்களோட பூர்விகம் டெல்லின்னு சொன்னாங்க. வரவழைச்சு போட்டோ செஷன் எடுத்தோம். பிடிச்சுப்போச்சு. டாப்ஸி ரொம்ப டெடிகேட்டடான பொண்ணு. மதுரையிலேயே தங்கி நடிச்சுக் கொடுத்தாங்க. இப்போ தெலுங்கு சினிமா, பாலிவுட்னு டாப்ஸியோட சம்பளம் கோடிகளில் எங்கேயோ போயிடுச்சு. ஆனால், அப்போ, `ஆடுகளம்’ படத்துக்கு டாப்ஸிக்கு நான் கொடுத்த சம்பளம் 7 லட்சம் ரூபாய்தான். உண்மையைச் சொல்லணும்னா, ஹீரோ தனுஷ் சார்ல இருந்து, கடைசி லைட்பாய் வரைக்கும் அத்தனைபேரும் ஆறுமாசம் சென்னை பக்கமே எட்டிக்கூடபார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement