இதனால் தான் அவர் வெளியில் வருதே இல்லை. ரேஸ் ட்ராக்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித்தின் ரேஸ் தோழி.

0
8559
alisha
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் கடந்த சில ஆண்டுகாளாகவே எந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கோ, பாராட்டு விழாவிற்கோ கலந்து கொள்வது இல்லை. அவ்வளவு ஏன் தனது படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கோ, வெற்றி விழாவிற்கோ கூட அஜித் கலந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.இறுதியாக கலைஞர் பாராட்டு விழாவின் போது நேரடியாக இனி தங்களை பொது நிகழ்ச்சிக்கோ, அரசியல் நிகழ்ச்சிக்கோ நடிகர்களை வற்புறுத்துகிறார்கள் என்று பேசிய வீடியோ பெரும் வைரலும் ஆனாது. அதன் பின்னர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்வது இல்லை.

-விளம்பரம்-

அதே போல 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் அஜித் கலைஞர் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். அதன் பின்னர் அவர் வேறு எந்த ஒரு பேட்டியிலும் நிகழ்ச்சியிலும் கூட கலந்து கொண்டது இல்லை. இந்த நிலையில் அஜித், ஏன் வெளியில் வருவது இல்லை என்று அஜித்தின் தோழியும் முதல் பெண் பைக் ரேஸரும், நடிகையுமான அலிஷா அப்துல்லா சமீபத்தில் தனது சமூக வளைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் டாப்ஸி ‘ஆடுகளம்’ படத்தில் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுக்கு நடிப்பை காட்டிலும் பைக் ரேஸ், கார் ரேஸில் தான் ஆர்வம் அதிகம். அவருடைய எல்லா படத்திலும் ஒரு சீனில் ஆவது பைக் ரேஸ் காட்சிகள் எடுக்கப்படும். அந்த வகையில் தற்போது வெளிவந்து சூப்பர் ஹிட்டான நேர்கொண்டபார்வை படத்திலும் ஒரு பைக் ரேஸ் ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதை தல அஜித் அவர்கள் தான் செய்தார் என்ற தகவலும் வெளிவந்தது. இப்படி அவர் நடிப்பில் காட்டும் அளவிற்கு அதிகமாக பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர்.

அதை விடக் கூடாது என்பதற்காகவே தன்னுடைய எல்லா படங்களிலும் அட்லீஸ்ட் ஒரு காட்சியிலாவது பைக் ரேஸ் வைத்து படம் நடித்து வருகிறார். கடந்த 2004 நடைபெற்ற பிரிட்டிஷ் பார்முலா த்ரீ ரேஸ் (British Formula Three Race) போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்தார். இந்த நிலையில் அஜித் ஏன் வெளியில் வருவது இல்லை என்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அலிஷா.

இதையும் பாருங்க : வீடியோ காலில் பேசிய மஹத். வீட்டில் சிம்பு என்ன பண்ணிட்டு இருக்காருன்னு பாருங்க.

-விளம்பரம்-

அதில் கார் ரேஸ் போட்டி நடைபெறும் இடத்தில இருக்கும் அஜித்தை பலர் சூழ்ந்து இருக்கின்றனர். இது குறித்து அலிஷா அப்துல்லா குறிப்பிட்டுள்ளதாவது, இதனால்தான் அஜித் சார் பொது இடங்களுக்கு வருவதே கிடையாது. ரசிகர்கள் அவருக்கென்று ஒரு தனிப்பட்ட நேரத்தை பயன்படுத்த விடுவதில்லை. இந்த புகைப்படம் ரேஸ் டிராக் ஒன்றில் எடுக்கப்பட்டது. அப்போது அவரை நடக்கக்கூட முடியாமல் மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

https://www.instagram.com/p/B2jvhWzHDiU/

அலிஷா அப்துல்லா ஒரு இந்திய பைக் ரேஸ் விளையாட்டு வீரர். இவரே இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரும் ஆவார். இவர் சிறு வயதில் இருந்தே தானுந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய எட்டு வயதில் இருந்தே பயிற்சி பெற்று, இன்று சாதனையும் படைத்துள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் இரும்பு குதிரை படத்தின் மூலம் அறிமுகமானார்.மேலும், இவர் அஜித்தின் பைக் ரேஸ் தோழி, இவரை பொறுத்த வரை அஜித் என்றால் கடவுள் என்று இவரே பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Advertisement