பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை டாப்சி. இவர் தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட சில படங்களில் தான் நடித்தார். அதற்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ‘பிங்க்’ படத்தின் மூலம் தான் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக டாப்ஸி மாறினார். கடந்த 2016 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படம் தான் பிங்க். இந்த படத்தை அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன், டாப்சீ உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், இந்த படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆனது. தமிழில் தல அஜித் அவர்கள் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இதையும் பாருங்க : இரவில் 8 மணிக்கு குழந்தையைஎண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவேன். சுஜா சொன்ன காரணம் பாருங்க.
தமிழிலும் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. தமிழில் இந்த படத்தை இயக்குனர் வினோத் தான் ரீமேக் செய்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. பிற மொழிகளிலும் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை டாப்சி அவர்கள் பிங்க் படத்தில் பறவைகள் வரிசையாக பறப்பது போன்று டாட்டூ வரைந்திருப்பார். அதுபற்றி தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். அதற்கு அவர் கூறிய பதில், நான் பிங்க் படத்தில் மினாலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில் நான் வரிசையாக பறவைகள் பறந்து கொண்டிருப்பது போல் டாட்டூ போட்டு இருப்பேன்.
அதற்கு காரணம் பறவைகள் சுதந்திரமாக பறப்பது போல் அவளும் சுதந்திரமாக பறக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கதாபாத்திரம் என்பதை உணர்த்துவது தான் அதற்கான அர்த்தம். அந்தப் படம் வெளியான பிறகு பல பெண்கள் அதே போல் டாட்டூ வரைந்து இருந்தனர். நானும் டாட்டூ பிரியை தான். நான் ஏற்கனவே இரண்டு டாட்டூ வரைந்து இருக்கிறேன். படத்தில் தற்காலிகமாக வரைந்து கொண்ட டாட்டூவை நான் நிரந்திரமாக என் கழுத்தில் வரைய ஆசை தான் ஆனால், அது என்னுடைய நடிப்பு துறைக்கு அது ஒத்து வராது என்பதால் நான் குத்திக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையும் பாருங்க : உங்களை வெஜிடேறியன்னு நெனச்சேன். ஸ்ருதி ஹாசன் சமையலை கண்டு ரசிகர் போட்ட கமெண்ட்.
ஏற்கனவே நடிகை டாப்சீ முதுகு மற்றும் ஒரு காலில் டாட்டூ வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸின் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருப்பது போரடிக்காமல் இருக்க பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள். அதேபோல் நடிகை டாப்சி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும், பிங்க் படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தான் பாலிவுட்டில் நடிகை டாப்ஸி அவர்கள் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். பிங்க் படத்தை தொடர்ந்து நடிகை டாப்ஸி ஹிந்தியில் பல படங்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் தான் இவர் நடிப்பில் தப்பட் படம் வெளியானது. ஆனால்,கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டரில் இருந்து படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை டாப்சி அவர்கள் தற்போது ஹசீனா தில்ருபா, ஷபாஷ் மீத்து உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.