3 நாளா சோதன போட்ட இந்த 3 விஷயத்த தான் கண்டுபுடிச்சாங்க – IT சோதனையை பங்கமாக கலாய்த்த டாப்ஸி.

0
1608
taapsee
- Advertisement -

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி எல்லையில், பல விவசாய சங்கங்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேகலாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால், குடியரசு தினத்தன்று டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். இதில், போலீசார் அனுமதிக்காத பகுதிகளிலும் சில விவசாயிகள் பேரணியை நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தகர்த்து பேரணியை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

-விளம்பரம்-

இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு ஆதரவராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நடிகர் அக்‌ஷய் குமார், கரண் ஜோஹர், சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர், அஜய் தேவ்கன் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் ந்தியாவிற்கு ஆதரவாக பல்வேறு பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக நடிகை டாப்ஸி தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதையும் பாருங்க : சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த நாதஸ்வரம் சீரியல் நடிகை – அழகிய ஜோடிகளின் புகைப்படம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த 3 ஆம் தேதி நடிகை டாப்ஸியின் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு இருந்தனர். இதே போல இயக்குநர் அனுராக் காஷ்யப், விகாஸ் பால் ஆகியோரின் வீடுகளிலும் வருமானத் துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். டாப்ஸி, அனுராக், விகாஸ் ஆகியோரது இடங்களையும் சேர்த்து மொத்தம் 22 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறியதால் தான் டாப்ஸி வருமான வரி சோதனைக்கு ஆளாகி இருக்கிறார் என்று பலரும் கூறி வந்தனர். மேலும், டாப்ஸிக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் நிலையில்டாப்ஸியிடம் நடைபெற்று வந்த வருமான வரித் துறையினரின் சோதனை இன்று (மார்ச் 6) முடிவுக்கு வந்திருக்கிறது. இதனையொட்டி நடிகை டாப்ஸி தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நக்கலாக ஒரு பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அதில், மூன்று நாள் தீவிர சோதனைக்குப் பின்னர் முக்கியமான சில விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 1. பாரிஸில் எனக்கு சொந்தமாக இருப்பதாக அவர்கள் சொல்லும் வீட்டு பங்களாவிற்கான சாவி. 2. கோடை விடுமுறை வருகிறதல்லவா?  நான் வேண்டாம் என மறுத்திருந்த 5 கோடி ரூபாய்க்கான ரசீது. எதிர்காலத்தில் என்னை சிக்கவைக்க உதவும் என்கிற நோக்கத்தோடு எடுத்திருக்கிறார்கள். மதிப்பிற்குரிய நிதி அமைச்சரின்படி 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சோதனையின் நினைவுகள். அவ்வளவு மலிவானவள் இல்லை” என்று படு கேலியாக ட்வீட் செய்துள்ளார்.

Advertisement