கார்த்தி உங்களையே திருமணம் செய்து இருக்க வேண்டும் – தமன்னாவின் பதிவில் ரசிகர்களின் கமெண்ட்ஸ்.

0
1337
karthi
- Advertisement -

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அமீர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார். அதேபோல இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி இன்றோடு (பிப்ரவரி 23) 16 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இதையொட்டி #16YearsOfParuthiveeran என்ற ஹேஷ் டேக்கை போட்டு பலரும் கார்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் நடிகை தமன்னா கார்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கார்த்தியின் புகைப்படத்தை பகிர்ந்து “உங்கள் 16 வருட அபாரமான பயணத்திற்கு வாழ்த்துக்கள். வரும் வருடங்களில் நீங்கள் மேலும் வெற்றிகளையும் அதிர்ஷ்டத்தையும் விரும்புகிறேன் கார்த்திக் என அவரை டேக் செய்தி பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலாக நிலையில் பலரும் கார்த்தி கடந்த காலத்தில் தமன்னாவை காதலிப்பதாக வந்த செய்தியை நினைவு குறித்த பதிவிட்டு வருகின்றனர். அதிலும் சிலர் கார்த்தி, தமன்னாவை திருமணம் செய்து இருக்க வேண்டும் என்றெல்லாம் கமன்ட் செய்துள்ளார்கள்.

- Advertisement -

கார்த்தி – தமன்னா ஜோடி :

கடந்த 2010ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான “பையா” படத்தில் நடிகை தம்மனா ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இருவரும் மிக நெருக்கமாக இருந்ததால் இருவரும் காதலிக்கின்றனரா? என கேள்விகளும் கிசுகிசுவும் எழுந்தது. இதனை தொடர்ந்து கார்த்தியும் தமன்னாவும் காதலிப்பதாக வந்த தகவலை அடுத்தே கார்த்தியுடன் அடித்த படமான சிறுத்தை படத்தில் நடிகை தமனாதான் நடிக்க வேண்டும் என்று கேட்டு நடிக்க வைத்தாக அப்போது சில கிசுகிசு பரவலாக வந்தது.

சிவக்குமார் மறுப்பு :

இதனை அடுத்து தமன்னா மற்றும் கார்த்தியின் காதல் விவகாரம் கார்த்தியின் தந்தை சிவகுமாருக்கு தெரியவே கடுமையாக எதிர்த்துள்ளார். தன்னுடைய மூத்த மகன் சூர்யா தான் காதல் திருமணம் செய்துவிட்டார் எனவே தன்னுடைய மூத்த மகன் கார்த்தியும் காதலித்து வருவதை எதிர்த்துள்ளார். இதனை அடுத்து கார்த்தியும் தன்னுடைய காதலை சிவகுமாருக்காக கைவிட்டதாக அப்போதே பலவிதமான கிசுகிசு வந்தது. ஆனால் இதனை அதிகாரப்பூர்வமாக கார்த்தியும், தமன்னாவும் ஒப்புக்கொள்ளவில்லை.

-விளம்பரம்-

தமன்னா ட்விட்டர் பதிவு :

தற்போது நடிகை தமன்னா விஜய் வர்மா என்ற பாலிவுட் நடிகருடன் பல விதமான இடங்களுக்கு சுற்றி வருகிறார். இந்த நிலையில் தான் தன்னுடைய முன்னாள் காதலன் கார்த்தி சினிமாவிற்கு வந்து 16ஆண்டுகள் நிறைவடைந்ததை பாராட்டும் வகையில் தண்டுபாய் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். இதனால் நெட்டிசன்கள் பலர் தமன்னா மற்றும் கார்த்தி காதலை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் தமன்னா இந்த கிசுகிசுவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு பேட்டியில் விளக்கம் கூறியிருந்தார்.

தமன்னா விளக்கம் :

அதாவது பையா படத்தில் படத்திற்கு என்ன தேவையோ அதைத்தான் நடித்து கொடுத்தேன். ஆனால் நெருக்கமான காட்சிகளில் நடித்தானால் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவி விட்டது. உண்மையில் பையா படத்தி இருவரும் நல்ல ஜோடி பொருத்தம் இருந்தது அதனை காதல் என சொல்லிவிட்டனர். கார்த்தியை நான் ஒரு சக நடிகராகத்தான் பார்க்கிறேன். நட்பு ரீதியாக கூட நெருங்கி பழகியதில்லை இதனை எப்படி அவர்கள் காதல் என கூறுகிறார்கள் என தெரியவில்லை. நான் யாரை காதலித்தாலும் முதலில் அதனை தெரிவிக்கும் நபர் நானாகத்தான் இருப்பேன். அதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி இருக்கும் என தெரிவித்திருந்தார்.

Advertisement