பரபரப்பாக நடைபெற்ற தயாரிப்பாளர் தேர்தல் முடிவுகள் – வெற்றி பெற்றது இவர் தான். டி ஆர் வாங்கிய வாக்குகள் எவ்வளவு தெரியுமா ?

0
2002
- Advertisement -

தமிழ் சினிமா தயாரிப்பாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க சர்ச்சைகள் அனைவரும் அறிந்த ஒன்று தான். விஷால் தலைமையிலான அணி பதவியில் இருந்து வந்தனர். கடைசி காலத்தில் இந்த விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. அடுத்த தேர்தல் நீதிமன்ற வழக்கு வரை சென்று பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இப்படி ஒரு நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்திரனும், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, தேனப்பன் பி.எல். ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பி.எல்.தேனப்பன் மட்டும் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இந்த தேர்தலில் மொத்தம் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிட்டனர்.  துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் 1,303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பல கட்ட சட்டப்போராட்டங்களையும் கடந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (நவம்பர் 22) அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

- Advertisement -

வழக்கமாக தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து சில மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் ஆனால் இந்த முறை மறுநாள் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகளும், டி.ராஜேந்தர் 337 வாக்குகளும் பெற்றுள்ளனர்.பி.எல்.தேனப்பன் 87 வாக்குகள் பெற்றுள்ளார்.டி.ராஜேந்திரை விட 220 வாக்குகள் அதிகம் பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்வாகியுள்ளார். இதைத்தொடர்ந்து துணைத்தலைவர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டுவந்தது.

அதில் டி.ஆர். அணியைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகிய இருந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவராக பாஜக OBC அணியின் மாநில துணைத் தலைவர் திரு.ஆர்.கே.சுரேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கியுள்ளனர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார்கள். இதில் பதிவியில் உள்ள நிர்வாகிகள் யாருமே, தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடவில்லை. இதனால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement