இனி மைக் நீட்டி கருத்து கேட்கவும், முதல் நாளே விமர்சனம் செய்யவும் முடியாது – தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய கட்டுப்பாடு.

0
378
prasanth
- Advertisement -

சினிமா விமர்சனங்களை செய்வதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சமூக வலைத்தளம் என்ற ஒன்று உருவானதிலிருந்து விமர்சகர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீப காலமாகவே youtube, twitter, instagram உட்பட பல சமூக வலைத்தளங்களில் சினிமா விமர்சகர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, ஒரு திரைப்பட வசூலில் சமூக வலைத்தளங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

அதுவும் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்கள் மூலம் திரைப்பட வசூல் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு படத்தை பார்க்க செல்வதற்கு முன்பு ரசிகர்கள் பலரும் சினிமா விமர்சகர்கள் சொல்வதை கேட்டு தான் படத்தை பார்க்க வேண்டுமா? வேண்டாமா என்ற முடிவை எடுக்கிறார்கள். இதனால் ஒரு படத்தைப் பற்றி நெகட்டிவான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் திணிக்கும் போது அவர்கள் அந்த படத்தை பார்ப்பதை தவிர்த்து விடுகிறார்கள். ஆரம்ப காலத்தில் படம் வெளியானால் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் முதல் மூன்று நாட்களுக்கு நன்றாக ஓடும்.

- Advertisement -

பாய்காட் பிரச்சாரம்:

இதனால் முதலீடு செய்த தயாரிப்பாளர்களும், படக்குழுவினருக்கும் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், இப்போது படம் வெளியாகி சில மணி நேரத்திலேயே படத்தை குறித்த விமர்சனம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகுவதால் படம் வெளியான அன்றே வசூலின் தாக்கம் குறைந்து விடுகிறது. இதனால் கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் பாய்காட் என்ற பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கின்றது. இதில் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர்களின் படங்கள் கூட படுதோல்வியை சந்தித்ததாக விமர்சனங்கள் எழுந்திருந்தது.

தயாரிப்பாளர் சங்கம் கூட்டம்:

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் சினிமா விமர்சனங்களை செய்வதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது கட்டுப்பாடுகளை கொண்டு வர இருக்கிறது. இது தொடர்பான கூட்டம் சில தினங்களுக்கு முன்பு தேனாம்பேட்டை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் என். இராமசாமி தலைமை வகித்திருந்தார். சங்கத்தின் துணைத் தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே சுரேஷ், கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

சினிமா விமர்சகர் குறித்து சொன்னது:

மேலும், இந்த கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 500க்கும் அதிகமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். பின் அந்தக் கூட்டத்தில் அவர்கள் கூறியிருந்தது, சிறு முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களை சங்கத்தின் வர்த்தக அறக்கட்டளை மூலம் ஒடிடி தளங்களில் வெளியிட்டு தயாரிப்பாளர்கள் பயனடைய செய்யப்படும். திரைப்படங்களின் விமர்சனங்களை படம் ரிலீஸ் ஆன தேதியில் இருந்து மூன்று நாட்கள் கழித்து தான் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுத வேண்டும்.

தயாரிப்பாளர்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகள்:

திரைப்படங்களையும், நடிகர், நடிகையர் உள்ளிட்ட திரைத்துறையினர் மீதும் தனிப்பட்ட முறையில் அவதூறாக பொய் செய்தி பரப்பும் மீடியாக்களுக்கு எந்தவித பேட்டியும் திரைத்துறையினர் தருவதை தவிர்க்க வேண்டும். தியேட்டர்களில் படம் பார்த்த பின்பு கருத்து கேட்பதற்காக கொண்டுவரும் கேமராக்களை திரையரங்குகளில் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என திரையரங்கு உரிமையாளர்களை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்வதாகவும் கூறியிருந்தார்கள். இப்படி பல தீர்மானங்களை இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Advertisement